ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திரக் கூட்டம்.
Sunday, March 28, 2010
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் – ன் மாதாந்திரக் ஆலோசனைக் கூட்டம் ஏ.எஸ்.முகைதீன் அவர்கள் தலைமையில் 23.03.2010 அன்று ரியாத் தவ்ஹீத் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் கடையநல்லூரில் 19.03.2010 அன்று நடைபெற்ற மஸ்ஜித் முபாரக் – யின் பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை விளக்கி சகோ. மவுலவி எஸ்.எ.பஷீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். மேலும் மஃரீப் தொழுகைக்கு முன்பாக ஊரிலிருந்து டெலிபோன் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைத் தலைவர் சகோ.முஹம்மது கோரி. அவர்கள் இன்ஷா அல்லாஹ் ஜுலை 4 அன்று நடைபெற விருக்கும் மாபெரும் உரிமை மீட்பு மாநாட்டிற்கு இது வரை நமதூரில் செய்த பணிகளையும் இனி செய்ய வேண்டியவை பற்றி இங்கிருந்து மக்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக விளக்கமளித்தார்.
இறுதியாக சமீபத்தில் மரணமடைந்த தம்மாம் உஸ்மான் அவர்களின் மறுமை வெற்றிக்காக து ஆ ச் செய்யும்படி கேட்டுக் கொண்டு இனிதே முடிவடைந்தது. இதில் ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் அதிகமானோர் கலநது கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் .






0 comments:
Post a Comment