குடிநீர் கட்டணத்தை உயர்த்த திட்டமிடும் நகராட்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை

Thursday, February 4, 2010

கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் கட்டணத்தை 2மடங்கு உயர்த்த திட்டமிடுவதை கைவிடவேண்டும். என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைத்தலைவர் ஜபாருல்லா, மாவட்ட அரசு நலத்திட்ட அணிச்செயலாளர் சுலைமான் ஆகியோர் கூட்டாக வெளிட்ட அறிக்கையில் கடையநல்லூர் நகராட்சி தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. வரலாறு காணத வகையில் வீட்டு வரியை உயர்த்தி விட்டு மக்களின் கோபத்திற்கும், சாபத்திற்கும் நகராட்சி தலைவரும் அதிகாரியும் ஆளாகிவிட்டானர்.
வீட்டு வரியை திரும்ப பெற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் நடத்தியும் சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் நகராட்சி எடுக்கவில்லை. இன் நிலையில் வரி உயர்வால் பாதிக்கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தற்போது மீண்டும்; குடிநீர் கட்டணம் உயர்வை வருகின்ற நகர்மன்ற கூட்டத்தொடரில் கொண்டுவர திட்டமிட்டிருப்பதை உடனடியாக கைவிடவேண்டும். நகர மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். சட்டமன்ற உறுப்பினரும் நகர்மன்ற தலைவரும் உறுப்பினர்களும் விரும்பினால் ரூபாய் 21.41கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோக மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த விரும்பினால் குடிநீர் கட்டணம் உயர்வில்லாமல் நிறைவேற்றவேண்டும். மாறாhக குடிநீர் கட்டணம் ரூ.50-லிருந்து 100ஆகவும் முன் வைப்புத்தொகை ரூபாய் 4இ000-லிருந்து 6,000-ஆகவும் உயர்த்தி மக்களை கஷ;டத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

வருகின்ற நகர்மன்ற கூட்டத்தொடரில் குடிநீர் கட்டணஉயர்வுக்கான தீர்மானத்தை உறுப்பினர் அனைவரும் அதை எதிர்த்து கைவிடவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு ஸைபுல்லா அவர்கள் தலைமையில் பொது மக்களை திரட்டி நகர்மன்றம் முற்றகையிடப்படும்.



இப்படிக்கு


ஜபாருல்லா
மாவட்ட துணைத்தலைவர்


சுலைமான்
மாவட்டஅரசு நலத்திட்டஅணிசெயலாளர்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP