கடையநல்லூர் தவ்ஹீத் கூட்டம்

Thursday, February 4, 2010

அல்லாஹ்வின் திருப்பெயரால்

ரியாத், கடையநல்லூர் தவ்ஹீத் செயலகத்தில் கடந்த 29-01-2010 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு முஹம்மது A.S மைதீன் அவர்களின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தாயகம் சென்று திரும்பி வந்த பஷீர் மவ்லவி அவர்கள் ஊரில் நடைபெற்று வருகின்ற பணிகளை விரிவாக விளக்கி உரை நிகழ்த்தினார்கள். அவர்களின் உரைக்கு பின் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்:


1) நமது ஜமாஅத்தின் சார்பாக நமதூரில் நடைபெற்று வருகின்ற அனைத்து பணிகளுக்கும் ஒத்துழைப்பையும், நிதி உதவிகளையும்,, அதற்கான துஆக்களையும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

2) மகளிர் இஸ்லாமிய கல்லூரிக்காக தனி சந்தாக்கள் மூலமாக வசூலிப்பது என முடிவுசெய்து அதற்காக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.

3) முபாரக் பள்ளிக்காக புதிய இடம் வாங்கியதால் ஆன கடனுக்காக இன்னும் பல நபர்களை சந்தித்து வசூல் செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

4) நமதூர் நிகழ்ச்சிகள் இமயம் வு.ஏ.-யில் அடிக்கடி இடம்பெற வேண்டும் என்பதற்காக வெள்ளிமேடைகள் வீடியோ எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட வேண்டும்.

5) நமதூரில் இயங்கி வரும் ஆம்புலென்ஸ் வாடகைகள் (கொஞ்சம் அதிகமாக உள்ளது என்று உறுப்பினர்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில்) குறைக்கப்பட வேண்டும்.

6) ர்pயாத்திலுள்ள நம் கொள்கை சகோதரர்களை சந்தித்து, உறுப்பினர்களை அதிகம் சேர்த்து சந்தாக்களை பெருக்க வேண்டும் எனவும், சந்தா தருவதாக பெயர் கொடுத்தவர்களிடம் கட்டாய வசூல் செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.



இப்படிக்கு

ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்


0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP