அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம்
Sunday, January 31, 2010
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக வாழ் கடையநல்லுர் தவ்ஹீத் ஜமாத் செயர்குழு கூட்டம் கடந்த 29.01.2010 வெள்ளியன்று துபாய் JT மர்க்கஸ் ல் சகோ.முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது,
அதில் கடையநல்லூரில் கடந்த மாதம் நடைபெற்ற தாஃவா மேம்பாட்டுக் கூட்டம் பற்றி ஆலோசிக்கப்பட்டது, மேலும் அதற்குத் தேவையான பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சமீபத்தில் தொடங்கிய வட்டியில்லா கடன் திட்டம் தலைவர் சகோ.முஹம்மது அலி வந்திருந்த மக்களிடம் விளக்கினார், கூட்டம் மாலை 5.30 மணிக்கு துவங்கி மஃக்ரீப் தொழுகைக்குபிறகும் நடந்து 7.00 மணிக்கு முடிவடைந்தது. அல்ஹம்திலில்லாஹ்







0 comments:
Post a Comment