அதிகமான பாவ காரியங்களை மன்னிக்கும் தொழுகையும், தொழுகையில் திருட்டும்
Tuesday, January 26, 2010
بســــم الله الـر حـمـن الرحـــيــم
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் அடிப்படை துாண்களாக ஐந்து கடமைகளின் மீது அமைந்துள்ளது. அதில் ஒரு கடமை தொழுகையாகும்.
அல்லாஹ் தன் திருமறையில் தொழுகையைப் பற்றி குறிப்பிடும் போது,
தொழுகையை நிலை நிறுத்துங்கள் (அல்குர்ஆன் 30.31) மேலும்
நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீர் வணங்குவீராக! என்னை நினைவு கூறும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!
(அல்குர்ஆன் 20.14) என்று கூறுகின்றான்
. சாதரணமாக நம்மை விட கீழே பணிபுரிகின்றவரை நமக்கு ஏற்ற மரியாதை தர வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். கண்ணுக்கு தெரியாத பொருட்கள் முதல் இப்பேரண்டத்தை படைத்து பரிபாலிக்கும் வணக்கத்திற்குறிய அல்லாஹ் தன்னை நாளில் ஒரு சில நிமிடங்களே வணங்குமாறு கட்டளையிடுகின்றான். அவன் நமக்கு பல வகைப் பொருட்களை பிரித்தறிவதற்கு கண்களையும், அனைத்துவிதமான சுவைகளையும் தனித்தனியே பிரித்தறிய நாவையும், ஒவ்வொரு வகை வாசணைகளையும் உணர்வதற்கு நாசித் துளைகளையும், ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என உடலின் அனைத்தையும் படைத்து, நாம் சரியாக வாழ்வதற்கான வாழ்வாதாரங்களையும் படைத்துள்ளான். இதற்குஅத்துனைக்கும் நன்றிசெலுத்த இறைவன் ஒரு சில நிமிடங்களே ஒரு நாளில் தன்னை நினைவு கூறுமாறும் கட்டளையிடுகின்றான். அவனை இவ்வாறு நினைவுகூறுதலால் அவன் கணக்கிலடங்கா பாவங்களையும் மன்னிக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்
மறுமையில் (செயல்களை குறித்து) முதல் விசாரணை தொழுகையைக் குறித்தே இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுஹுரைரா - ரலி, நூல் : அபுதாவூத்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வதைப் போல் ஒருவனின் ஆரம்பகட்ட செயல்பாடுகள் தான் அவனை குறித்த செயல்பாடுகளை வெளிக்காட்டுகின்றது. அதே போல் மறுமையின் முதல் விசாரணை தொழுகையில் இருந்துதான் ஆரம்பமாகின்றது. அந்த முதல் விசாரணையான தொழுகையில் நாம் தேர்ச்சிபெற தொழுகையைப் முறைப்படி பேண வேண்டும்.
மேலும் தொழுகையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது
அடியானுக்கும் இணைவைத்தலுக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் -ரலி, நூல் : முஸ்லிம்
அல்லாஹ்வின் துாதர் அவர்கள் தொழாத ஒருவனை இணைவைத்தவனுடன் ஒப்பீடு செய்கின்றார்கள். தொழுகைக்கு எவ்வளவு முன்னுறிமை கொடுத்தால் இணைவைத்தவனுடன் ஒப்பீடுசெய்திருப்பார்கள். இதன் மூலம் ஓரிறைக் கொள்கையை ஏற்றவனாக இருப்பதின் அடிப்படையே தொழுகையில் தான் உள்ளது. மறுமையில் அல்லாஹ் மன்னிக்காத காரியங்களின் ஒரு முக்கியமான காரியம் இணைவைப்பாகும். சுடும் நெருப்பைப் போல வெறுத்து ஒதுக்கக் கூடிய காரியத்துடன் தொழுகையை ஒப்பிட்டால் தொழுகையை விடுவது எவ்வளவு பெரிய பாவமான காரியமாக என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
மேலும் தொழுகையைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹீரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கின்றது.அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள் என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது என நபித் தோழர்கள் கூறினர். இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகின்றான்.
நுால்– புகாரி
தினமும் ஐவேளைத் தொழுகையை தொழுது வந்தால் ஆற்றில் ஐந்து முறை தினமும் குளித்து அழுக்குகள் இல்லாமல் சுத்தமான மனிதரைப் போல் தவறுகளை அப்புறப்படுத்தி இந்த தொழுகை சுத்தம் செய்கின்றது. இன்றைய கால கட்டத்தில் எங்கும் தீமைகள் வெட்ட வெளிச்சமாக பரவிக்கிடக்கின்றன. இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள தொழுகைதான் இன்றியமையாததாகும். ஒவ்வொறு தொழுகையின் இடைவெளியிலும் செல்பேசி போல் சார்ஜ் குறைந்து கொண்டே வரும்போது நாம் ஒரு நாளில் ஐந்து தடவை முறையாக சார்ஜ் செய்தால் தான் அல்லாஹ்வினுடைய இறையச்சம் நிரம்பியவர்களாக இருப்போம்.
தொழுகையில்தான் அல்லாஹ் இத்தனை பாவங்களை மன்னிக்கிறான் என்றால் அதற்கு தயாராகும் ஒழுவிலிருந்தே அல்லாஹ் பன்மடங்கு பாவங்களை மன்னிக்கின்றான்.
உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
உஸ்மான் (ரலி) உழூச்செய்யும் போது (மக்களிடம்) நான் ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்கு சொல்லியிருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு ஒரு மனிதன் அழகிய முறையில் ஒழு செய்து விட்டு தொழவும் செய்வானாயின் அவன் தொழுது முடிக்கும் வரை அவனுக்கும் தொழுகைக்கும் இடையிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை கேட்டிருக்கின்றேன் என்றார்கள்.
நுால் – புகாரி
ஒருவன் ஒழுச் செய்து விட்டு தொழும் போது உள்ள இடைவெளியிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படும் என்றால் அல்லாஹ் நம்மீது எவ்வளவு இரக்ககுணமுடையவனாக உள்ளான். எனவே முறையான தொழுகையைப் பேண வேண்டும்.
மேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்
தொழுகையை நிலை நிறுத்துவீராக, நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக,அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன் 29:45)
தொழுகையை அல்லாஹ்வின் இறையச்சத்துடன் நிறைவேற்றுவது மானக்கேடான இறையச்சம் இல்லாதவன் செய்யும் காரியங்களில் இருந்தும், பல்வேறு தீமைகளின் இருந்தும் பல தீமைகளை அவர்கள் மனதளவிலேயே வெறுத்து ஒதுக்குமளவிற்கு இறையச்சமுடையவர்களாக காப்பாற்றும்.
தொழுகையின் கண்ணியம்
தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தவாறு கண்ணியத்தைக் காக்க வேண்டும். தொழுகையில் ரக்அத்துகளை பிடிப்பதற்காக பள்ளியே அதிரும் அளவிற்கு ஓடி வந்து சேர்வார்கள். பிறர் பார்ப்பதற்காக இறையச்சமில்லாமல் தொழுகையை நீட்டி தொழவும் செய்வார்கள். அல்லாஹ்வின் அச்சமில்லாமல் தொழும் தொழுகை அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படாது.
நபி (ஸல்) அவர்கள் கூறும் போது,
நீங்கள் பள்ளிக்கு வரும் போது அமைதியாகவும் கண்ணியத்துடனும் வாருங்கள். நீங்கள் இமாமுடன் தக்பீர் கட்டியதன் பின் உங்களுக்குக் கிடைத்த ரக்அத்துகளை அவருடன் தொழுங்கள். தவறி விட்ட ரக்அத்துக்களை இமாம் ஸலாம் கொடுத்ததன் பின் பூரணப் படுத்திக் கொள்ளுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள்.
(புகாரி 591)
மேலும் தொழுகையில் இமாமை பின்பற்றிதான் தொழுகையை நிறைவேற்றவேண்டும். தொழுகையில் இமாமை பின்பற்றாமல் முன்கூட்டியே எழக்கூடியவரின்தலையை அல்லாஹ் கழுதையின் தலையைப் போலவோ அல்லது கழுதையின்உறுவத்தைப் போல மாற்றிவிடுவான் என பயப்பட வேண்டாமா? எனக் கடுமையானகூறியிருப்பதால் இது எவ்வளவு பெரிய தவறாக இருக்கும் என சிந்திக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறும் போது
உங்களில் இமாமை முந்திக் கொண்டு (ருகூஉவில் தலையை உயர்த்துபவர் அவரது தலையை கழுதையின் தலை போல் அல்லது அவரது உருவத்தை கழுதையின் உருவத்தைப் போல் அல்லாஹ் மாற்றி விடுவான் என்று பயப்பட வேண்டாமா? என்று கூறினார்கள்.
(ஆதாரம் புகாரி 650)
ஆனால் பலரிடம் இவ்வாறான பொருமையின்மைத் தெரிகின்றது. இதனை அவர்கள்இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும்.
தொழுகையின் திருடுபவன்
திருட்டுக் குற்றம் என்பது மிகவும் கேவலமான ஒன்றாகும். தொழுகையில்திருடுவது என்பது வித்தியாசாக உள்ளதைப் போன்று தோன்றும். தொழுகையைபலர் முறையாகத் தொழாமல், தொழுகையில் எதையும் முழுமையாகச் செய்யாமல்அறைகுறையாகவே நிறைவேற்றுகின்றனர்.
திருட்டுக் குற்றங்களில் மிகப் பெரும் குற்றம் தொழுகையில் திருடுவதாகும்.திருடர்களில் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஒருவன் எப்படித் திருடுவான்? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவன் தொழுகையில்ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்ய மாட்டான் எனக் கூறினார்கள்’
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் அபீகதாதா (ரலி) நூல்:அஹ்மத்
எனவே தொழுகையை அதில் நேரந்தவராமல் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி (ஸல்) அலை அவர்கள் காட்டித்தந்தவாறு முறையாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு தொழுகையை அல்லாஹ்வுக்காக மட்டும் தொழுது இறையச்சமுடையவர்களாக நடந்துகொண்டால் அல்லாஹ் நமக்கு வாக்குறுதி செய்தவாறு அளவிலடங்கா பாவங்களை மன்னிப்பான். இன்ஷா அல்லாஹ்...
- கடையநல்லுார் மசூது
0 comments:
Post a Comment