ஒடுக்கப்படவேண்டிய ஒடுக்கத்துப் புதன்
Tuesday, January 26, 2010
ஸபர் மாதத்தைப் பற்றி முஸ்லிம்களின் தவறான நம்பிக்கை
ஸபர் மாதத்தை சில முஸ்லிம்கள் பீடை மாதமாகக் கருதுகின்றனர். திருமணம் போன்ற சில நல்ல காரியங்களை இம்மாதத்தில் செய்ய மாமட்டார்கள். இதற்குக் காரணம் ஸபர் மாதத்தின் கடைசிப் புதனில் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். பிறகு அந்த நோய் தான் அவர்களின் மரணத்திற்குக் காரணமானது. ஆதனால் சில முஸ்லிம்கள் ஸபர் மாதத் தின் கடைசிப் புதனை ஒடுக்கத்துப் புதனாக அனுஷ்டிக்கிறார்கள். அந்தப் புதனில் முஸீபத்- பீடை நீங்குவதற்காக ஊருக்கு வெளியே உள்ள ஆற்றங்கரைக்கோ கடற்கரைக்கோ சென்று அங்குள்ள நீரில் குளித்து பீடையைப் போக்கிக் கொள்வார்கள். ஒரு சிலர் அங்கு கந்தூரி கொண்டாடிவிட்டுத் திரும்புவார்கள். மேலும் ஒரு சில பகுதிகளில் ஒடுக்கத்துப் புதன் அன்று முஸீபத் நீங்குவதற்காக ஆலிம்கள் மாவிலைகளில் எதையாவது எழுதிக் கொடுப்பார்கள். அதைத் தண்ணீரில் கரைத்துக் குளித்தால் - குடித்தால் முஸீபத் நீங்குமாம்.
ஸபர் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள் என்பதற்காக அம்மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவது குற்றமாகும். பீடையை நீக்குவதற்காக மேற்கண்ட காரியங் களைச் செய்வது பித்அத்- அநாச்சாரமாகும். ஏனெனில் அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூத ரோ இவ்வாறு நமக்குக் கற்றுத் தரவில்லை.
'நமது உத்தரவில்லாத செயலை எவன் செய்கிறானோ அது நிராகரிக்கப்படும்' என்றும் நம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை எவன் உருவாக்குகிறானோ அது நிராகரிக் கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) தொற்று நோய் என்பது கிடையாது, சகுனம் என்பது கிடையாது, ஆந்தை அபசகுனம் என்பது கிடையாது, ஸபர் மாதம் பீடை என்பiது கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி: 5757)
நற்காரியங்களை நடத்துவதற்கு நாள் நட்சத்திரம் பார்ப்பது
நல்ல காரியங்களை நடத்துவதற்கு நல்ல நேரம், நல்ல நாள், நல்ல மாதம் என்றெல் லாம் பார்ப்பது கூடாது. ஏனெனில் எல்லா நாட்களும் அல்லாஹ் படைத்த நாட்களாகும். ஒரு நாளில் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். இது உலகில் அல்லாஹ் ஏற்படுத்திய நியதியாகும்.
ஒரு நாள் நல்ல நாளாக இருந்தால் அந்நாள் உலகில் எல்லலோருக்கும் நல்ல நாளாக இருக்க வேண்டும். ஒரு நாள் கெட்ட நாளாக இருந்தால் அந்நாள் உலகில் எல்லோ ருக்கும் கெட்ட நாளாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே! ஒரு நாளில் ஒருவனுக்கு நல்லது நடக்கின்றது என்றால் அதே நாளில் வேறொருவனுக்கு கெட்டது நடக்கின்றது. ஒரு வீட்டில் திருமணம் நடக்கின்ற அதே நேரத்தில் இன்னொரு வீட்டில் மரணம் நடக்கின்றது. இதுதான் நியதி! இதை நாம்; புரிந்து கொண்டால், 'நல்லதோ கெட்டதோ அது நேரத்தில் இல்லை. மாறாக அல்லாஹ்விடத்தில் உள்ளது. அவன் யாருக்கு நல்லதை நாடியுள்ளான், யாருக்கு கெட்டதை நாடியுள்ளான் என்று யாருக்கும் தெரியாது' என்பதை விளங்கிக் கொள்வோம். எனவே நல்ல நாள் கெட்ட நாள் பார்க்காமல் நாம் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி காரியங்களை நடத்திட வேண்டும். இஸ்லாம் இப்படித்தான் நமக்கு வழிகாட்டுகிறது. அல்லாஹ்வின் தீர்ப்பை நாம் கையில் எடுக்கக் கூடாது. '(நபியே!) கூறும்: அல்லாஹ் நமக்கு எதை விதித்திருக்கிறானோ அதுதான் நமக்கு ஏற்படும். அவன்தான் நம்முடைய எஜமான். முஃமின்கள் அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருக்கட்டும்.' (9:51)
'காலத்தைக் குறை கூறுவதன் மூலம் மனிதன் எனக்கு நோவினை தருகிறான். நானோ காலமாக இருக்கிறேன். காரியம் அனைத்தும் என் கையில்தான் இருக்கிறது. இரவு பகலை நானே புறட்டுகின்றேன் ' என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 7491)
எனவே அன்பார்ந்த முஸ்லிம்களே! ஸபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதுவதை விட்டும் ஒடுக்கத்துப் புதன் கொண்டாடாடுவதை விட்டும் தவிர்ந்து கொள்வோமாக! நாள், மாதம், நேரம், இடம், காலம், எண்கள், மனிதன், வாகனம், வீடு, கடை, போன்ற எதையும் அபசகுன மாகக் கருதுவது கூடாது. 'சகுனம் பார்ப்பது இணைவைத்தலாகும்' என நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (அபூதாவூது: 3910) எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
0 comments:
Post a Comment