தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் அல் ஹக் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைப்பு

Saturday, October 16, 2010

 நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அல் ஹக் இஸ்லாமிய அழைப்பு மையம் என்ற பெயரில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இஸ்மாயில் என்ற சகோதரர் பல ஆண்டுகளாக தனி அமைப்பாக செயல்பட்டு செயல்பட்டு வந்தார். அவர் செப்டம்பர் 24, 2010 அன்று நெல்லை மாவட்ட துணைத் தலைவர் டிஎம் ஜபருல்லாஹ் அவர்களை இஸ்மாயீல் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் நடத்திக் கொண்டிருக்கின்ற அல் ஹக் இஸ்லாமிய அழைப்பு மையத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார். உடனே மாவட்ட துணைத் தலைவர் நெல்லை மாவட்ட தலைவர் யூசுப் அலியை தொடர்பு கொண்டு விபரத்தை எடுத்துக் கூறினார்.
மாவட்ட தலைவரின் ஒப்புதலுடன் 01.01.2010 வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட துணைத் தலைவர் டிஎம். ஜபருல்லாஹ், மாவட்ட நலத்திட்ட செயலாளர் சுலைமான், அமீரக அபுதாபி மண்டல செயலாளர் அப்துஸ் ஸலாம், எம்.எம்.ஸைபுல்லாஹ் எம்ஐஎஸ்சி, டி.ஜே. மசூது ஸாஹிப் (துபை) ஆகியோர் செங்கோட்டை சென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தனர்.
அதன் பின்னர் அல் ஹக் நிறுவனர் இஸ்மாயீல் அவர்களை அழைத்து இஸ்லாமிய அமைப்புகள் பல இருந்தும் நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுந்தான் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இறையச்சத்துடனும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் செயல்படுகிறது. ஆகையால்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தேர்ந்தெடுத்து அதில் இணைய விரும்புவதாகக் கூறினார்.
அத்துடன் நகரின் மையப்பகுதியில் தனது கட்டுப்பாட்டில் உள்ள 50 சதுர அடி பரப்பளவுள்ள மர்கஸ், நூலகம், ஆம்ப்ளிபயர். மைக் செட் அனைத்தையும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நகர நிர்வாகிகளிடம் ஒப்படைத்துவிட்டு தான் சாதாரண உறுப்பினராக இருந்து செயல்படுகிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நகர நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகளாக துடிப்புள்ள இளைஞர்களை தேர்தெடுத்தனர். தலைவராக பைசல், செயலாளராக மைதீன், பொருளாளராக சதீஸ் என்ற புகாரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP