தக்வா பள்ளிவாச ல் புதிய லைப்ரரி துவங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

Wednesday, October 27, 2010

             அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் கடையநல்லூரில் பல்வேறு விதமாக இஸ்லாமிய மார்க்க அழைப்புப் பணி நடைபெற்று வருகிறது.



குறிப்பாக இன்றைய இளைஞர் சமுதாயம் தங்களுடைய மார்க்க அறிவை அதிகம் அதிகம் கற்று மக்களை சீர்திருத்துவதில் அக்கறை காட்ட வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் அதிகமாக கூடும் மஸ்ஜித் தக்வா வில்  , கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ. அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு மார்க்க மற்றும் இயக்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் பதிலளித்தார்கள். மேலும் மஃரீப் தொழுகைக்குப் பிறகு மார்க்க உரைகளும் நடைபெற்று வருகிறது. 


அதன் அடிப்படையில்  அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 25.10.2010 (திங்கள்) அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் மஸ்ஜித் தக்வா  வில் அங்கு ஒரு புதிய இஸ்லாமிய நூலகம்  துவங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம். சகோ. எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிகமானோர் கலந்து கொண்டு பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் அங்கு ஒரு இஸ்லாமிய நூலகம்  துவங்கப்படும் அல்ஹம்துலில்லாஹ். 




0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP