ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம்
Tuesday, October 26, 2010
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் , ரியாத் மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் கடந்த 22.10.2010 அன்று தவ்ஹீத் ஜமாஅத் செயலகத்தில் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு சகோதரர் A.S.முகைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சகோ.கபீர் மவ்லவி அவர்கள் “இறையச்சத்தினால் ஏற்படும் விளைவுகள்” என்ற தலைப்பில் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் சிறப்பாக உரையாற்றினார்கள்.
மேலும் அதில் பேசப்பட்டவைகள்.
- பாபர் மஸ்ஜித் விஷயத்தில் அலகாபாத் உயர்நீதிமண்றம் வழங்கிய தீர்ப்பு பெரும்பான்மை சமுதாயத்தை திருப்தி படுத்தும் விதத்தில் , சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு என்பதால் அதை கண்டிப்பதோடு , நீதி கிடைக்கும் வரை போராடவேண்டும் எனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
- பாபர் மஸ்ஜித்தை இடிப்பதற்கு காரணமாக இருந்த பாசிச வந்தேரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக தண்டிக்க வேண்டும்.
- இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 4 அன்று நடக்கவிருக்கின்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்சிக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- மார்க்கத்தைச் சொல்லி போலி ஒற்றுமை கொஷம் போடும் வேடதாரிகளை சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும்.
- ரியாத் மற்றும் நமது ஊரில் நடைபெற்று வருகின்ற மார்க்க மற்றும் சமுதாய பணிகளுக்கு உதவுவதோடு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.
- இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஹஜ்ஜுப் பெருநாளில் கூட்டுக் குர்பானி என்ற அமலில் தகுதியுடையவர்கள் பங்கெடுக்க வேண்டும்.
இறுதியாக ஃபித்ரா மற்றும் இஃப்தார் கணக்குகளின் பிரதிகளும் , நமதூரில் நடத்தப்பட்ட மார்க்க விளகக்கூட்ட்த்தில் உரை நிகழ்த்திய மாநிலத்தலைவர் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களின் டிவிடி வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. இறுதியாக அல்லாஹ்வின் கிருபையால் து ஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்மதுலில்லாஹ்.









0 comments:
Post a Comment