கடையநல்லூரில் பெண்களுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி..

Monday, October 11, 2010

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பாக 10.10.2010 (ஞாயிறு)அன்று  மாலை 5 மணி முதல் மக்ரிப் தொழுகை வரை மஸ்ஜிதுல் முபாரக் வளாக (நஜாஹ் நர்ஸரி)த்தில் பெண்களுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் டிஎம். ஜபருல்லாஹ், குறிச்சிகுளம் சுலைமான், நகர நிர்வாகிகள் முஹம்மது கோரி, முஹம்மது காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இந்நிகழ்ச்சியில் மதரஸா மாணவிகள் நஜ்வா மற்றும் ஷஃபானா ஆகியோர் சின்னத்திரையில் சீரழியும் சமுதாயம். சமூக அவலங்கள் ஆகிய தலைப்புகளிலும்  மவ்லவி சகோ.யூசுப் பைஜி அவர்கள் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதன் பிறகு நடந்த மார்க்க சம்பந்தான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பெண்கள் கேட்க கேளிவிகளுக்கு மாநில மெலாண்மைக் குழு உறுப்பினர் சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.




































1 comments:

அபு ருமானா said...

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் இது போன்ற நமது சமுதாய பென்கள் பயன் பெறும் நிகழ்ச்சிகளை நாம் நடத்தினோம் என்றால் சிரழிவைநோக்கி சென்றுகொண்டிருக்கும் பென்கள் நல்வழி பெறுவதற்க்கு வல்ல நாயன் அருள்வான்

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP