அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

Wednesday, September 8, 2010


ல்லாஹ்வின்  மகத்தான கிருபையால் கடந்த வெள்ளியன்று (03.09.2010 ) மூன்றவது ஆண்டாக துபாய் ஹோர் அல் அன்ஸ் கராச்சி தர்பார் உணவகத்தில் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி, அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி அஸர் தொழுகைக்கு பிறகு 5:15 மணிக்கு துவங்கியது தலைமை உரை ஆற்றிய சகோ.முஹம்மது அலி அவர்கள் ”எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம் “  என்ற தலைப்பில் சிறப்பாக உரை ஆற்றினார்.
அதன் பிறகு உரை நிகழ்த்திய சிறப்பு விருந்தாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ன்   மாநில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.அப்துந் நாசர் அவர்கள் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடன் இனைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் , அங்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வரும் பணி குறித்தும் குர்ஆன்  ஹதீஸ் அடிப்படையில் விளக்கமளித்துப் பேசினார்.
பிறகு கடையநல்லூர் ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்து ஆண்டு நோன்பு முதல் இந்த ஆண்டு நோன்பு வரை செய்த , செய்து வரும் மார்க்க மற்றும் சமுதாய பணிகளின் செயல் பாட்டு அறிக்கையை தலைவர் மக்களுக்கு வாசித்துக் காண்பித்தார்கள்.
இறுதியாக இஃப்தார் நிகழ்ச்சியும் , மக்ரீப் தொழுகைக்குப் பிறகு  இரவு விருந்துடன் நிகழ்சி இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் கடையநல்லூரைச் சார்ந்த சுமார் 60 சகோதரர்களும் ஹோர் அல் அன்ஸ் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்



































0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP