நெல்லையில் மெகா வேலை வாய்ப்பு முகாம் இன்று தொடக்கம்

Friday, July 16, 2010

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட திமுக நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம் 16ம் தேதி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 300 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக மாவட்ட திமுக சார்பில் மெகா வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இன்று 16ம் தேதி துவங்கும் வேலைவாய்ப்பு முகாம் 18ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதற்காக பதிவு செய்தவர்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
முதல் நாளான 16ம் தேதி ‘ஏ‘ பிரிவில் இடம் பெற்றுள்ள பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், தொழிற்கல்வி படித்தவர்கள் 16 ஆயிரம் பேரும், இரண்டாம் நாளன்று ‘பி‘ பிரிவில் உள்ள டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் 14 ஆயிரம் பேரும் முகாமில் கலந்து கொள்கின்றனர். இறுதி நாளன்று ‘சி‘ பிரிவில் இடம் பிடித்துள்ள 30 ஆயிரம் பேர் முகாமில் கலந்து கொள்கின்றனர். இந்தியா முழுவதும் இருந்து பிரபலமான 300 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த மூன்று நாட்கள் முகாமிலும் கனிமொழி எம்.பி கலந்து கொள்கிறார்
நன்றி : www.inneram.com




0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP