நஜாஹ் மதரஸா பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Monday, July 19, 2010

ல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08.07.2010 (ஞாயிறு) மாலை 5 மணிக்கு முபாரக் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள நஜாஹ் நர்ஸரி வளாகத்தில் நஜாஹ் மதரஸாவில் பயிலும் மாணவமாணவியர்களின் பெற்றோர் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


 நமதூர் இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மதரஸாவில் பயிலும் குழந்தைகள் விசயத்தில் ஆசிரியர்கள் பயிற்றுவிப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வதைப் போல குறித்த நேரத்தில் குழந்தைகளை அனுப்புதல்,பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதைப் போல சுத்தமாக ஆடை அணிவித்து அனுப்புதல்,மதரஸாவில் பயின்ற பாடங்களை வீட்டில் படிக்கச் சொல்லிக் கேட்டல்அவர்களுடைய அன்றாட மதரஸா பாடங்களை கண்காணித்தல் போன்றவற்றில் பெற்றோர்களும் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் வயுறுத்திப் பேசியதோடு இவற்றிற்கான ஒப்புதல்களையும் பெற்றோர்களிடம் கேட்டுப் பெற்றார்.




























அத்துடன் பள்ளிப் படிப்பிற்கு இடையூறில்லாமல் தினசரி ஒரு மணி நேரம் உங்களது குழந்தைகள் நேரம் ஒதுக்கி வருகை தந்தால் எட்டு முதல் பன்னிரண்டு வகுப்பு வரை படிக்கும் இரு பாலருக்கும் தனித்தனியான  வகுப்புகள் நடத்தத் தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்ட பருவடைந்தவர்கள்வயதானவர்கள் இரு பாலருக்கும் மார்க்கத்தைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை நீங்கள் விரும்பினால் ஏற்படுத்தித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் தன் உரையில் கூறினார். இன்ஷா அல்லாஹ்..
இறுதியில் சகோ. அப்துந் நாஸர் அவர்களுடைய நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்ச்சியில் மதரஸா ஆசிரியர்கள் டி.எம். ஜபருல்லாஹ், கே.ஏ. முஹம்மது கோரி, ஏ.முஹம்மது மைதீன் ஜமா , ரபீக் அஹமத் கித்வாய், எம்.யூ. முஹம்மது யாசீன் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளர் முஹம்மது காசிம் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைசெய்தார்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP