நஜாஹ் நர்சரியில் பெற்றோர்கள் சந்திப்பு

Tuesday, July 27, 2010

ல்லாஹ்வின் கிருபையால் 25 .07 .2010 (ஞாயிறு) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர டிஎன்டிஜே தலைவர் முஹம்மது கோரி அவர்கள் தலைமையேற்று இஸ்லாமிய முறைப்படி குழந்தைகள் வளர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்கள். அதன் பின்பு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த பெற்றோர்கள் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்கள். இன்ஷா அல்லாஹ், அவைகளை நிர்வாகம் கவனத்தில் கொள்வதாக உறுதியளித்தது.

இதில் மாவட்ட துணைத் தலைவர் டி.எம்.ஜபருல்லாஹ், நகர செயலாளர் முஹம்மது காசிம் என்ற சின்சா, சேப்ளை ஜபருல்லாஹ், ரஃபீக் அஹமது கித்வாய், நஜாஹ் நர்ஸரி ஆசிரியைகள் மற்றும் அதிகமான பெற்றோர்கள் தமது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP