நாம் நடத்திய தீர்வைத் தேடி நிகழ்ச்சிக்கு எதிரான விமர்ச்சனும் அதற்கு தகுந்த பதிலும்.

Thursday, July 29, 2010

டந்த 23.07.2010 அன்று துபாய் JT மர்க்கஸில் அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் உள்ள நமது இஸ்லாமிய சமுதாய நலன் கருதி நடத்தப் பட்ட தீர்வைத் தேடிநிகழ்ச்சியை கண்டு போறாமைக் குணத்தோடு உள்ள ஒரு சிலர் இ-மெயில் மூலம் சில அவதூறுகளை பரப்பிக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகின்றனர்.அந்த அவதூறும் அதற்கு நமது பதிலும் கீழே தந்துள்ளோம்.
விமர்சனம் : 
 சமுதாய சீர்கேட்டிகு காரணம் யார்...காரணம்

நம் சமுதாயம் சீர்கேட்டின் உச்சத்தில் இருப்பதற்கு காரணம் ஒற்றுமைஇன்மை தான் காரணம் என்று எல்லா இயக்கவாதிகளும் தற்போது கூறிக்கொண்டு இருக்கிறார்கள் அது என்னமோ உண்மைதான் ஆனால் தற்போது சமுதாயம் பிளவு பட்டு இருக்க யார் காரணமோ அவர்களே இன்று சமுதாய ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசுகின்றனர் இவர்கள் எப்படி பட்டவர்கள் என்றால் சமுதாய ஒற்றுமையை சிதைத்ததை ஊர் ஊராக சென்று பெருமையாக பேசியவர்கள் தான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது ஆதலால் சமுதாய சீர்கேட்டை பற்றியோ ஒற்றுமை பற்றியோ பேசுவதற்கு இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை உண்மையான சமூகவாதிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 
அதோடு விட்டுவிடாமல் நம் சமூகத்தின் சீர்கேட்டின் காரணகர்தாவே இவர்கள்தான் வாயை மூலதனமாகவும் இஸ்லாத்தை வியாபார பொருளாகவும் நம்பி பொழப்பு நடத்தும் ஒருசில வீனார்களின் பேச்சை கேட்டு குதிரைக்கு லாடம் கட்டியதுபோல் அண்ணனின் பேச்சை கேட்டு சமுதாய அக்கறை உள்ளவர்கள் போல் வேடமணிந்து மாற்று இயக்கத்தினரையும் உண்மையான சமுதாய அக்கறை உள்ளவர்களையும் காட்டி கொடுக்கும் வேடதாரிகளை முதலில் நம் சமுதாயத்தை விட்டே ஒதிக்கி வைத்தால் தான் நம் சமுதாயம் சீர்படும் இப்படி சொல்வதற்கும் காரணம் இருகின்றது சமுதாயத்தை வளர்த்தோம் என்று வாயால் முழம் அளக்கும் வீணர்களின் இஸ்லாமிய வியாபாரத்தால் உண்மையில் என்ன மாற்றம் நடந்திருகின்றது.  
சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் இஸ்லாமிய சமூகத்தில் இருந்த கட்டுப்பாடு என்ன? ஒழுக்கம் என்ன? இஸ்லாமியர்கள் மேல் இருந்த மரியாதையை என்ன வென்று தெரிந்திருக்க இவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன் காரணம் இவர்களுக்கு ஒருவேளை தெரிந்திருந்தால் நிச்சயமாக தாங்கள் வக்கலாத்து வாங்கும் அந்த மேற்படி நபருக்கு சப்போர்ட் பண்ணி இருக்கமாட்டீர்கள்  இப்படி சொல்வதற்கும் காரணம் ஆயிரம் சொல்லமுடியும்.

தௌஹீத் என்ற பேரில் இயக்கம் ஓன்று ஆரம்பித்து உண்மையான தௌஹீதியத்தை சாமான்ய மக்களிடம் எப்படி கொண்டு வைக்கவேண்டும் எனதெரியாமல் பள்ளிவாசல்களில் சண்டை, தெருக்களில் சண்டை, குடும்பத்தில் சண்டை, பெற்றோர்களிடம் சண்டை, நண்பர்களிடம் சண்டை, கல்யானவீட்டில் சண்டை, பரவில்லை ஒரு உண்மையை சொல்லும் போது எல்லோருக்கும் வரும் பிரச்சனைதான் அதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை.  
பதினெட்டு வருடம் கழித்து தற்போதைய நம் சமூகத்தின் நிலைமைக்கு வருவோம் அவர்கள் கூறுவது போல் நம் இஸ்லாமிய சமூகத்தில் கீழே குறிப்பிட்டதுபோல் மாற்றங்கள் வந்திருக்க வேண்டும். 

1
தர்காக்களில் கூட்டம் குறைத்திருக்க வேண்டும் (தற்போது முன்பைவிட கூட்டம் அலைமோதுகிறது என்பது அனைவர்க்கும் தெரியும் ) 
பெண்களிடம் ஒழுக்க மாண்புகள் கூடியிருக்க வேண்டும் (சொல்லவே தேவையில்லை தற்போது நிலைமை) 
வட்டி வாங்குவது அறவே இல்லாமல் போயிருக்க வேண்டும். 
4
வெள்ளிகிழமை அல்லாத நாட்களிலும் பள்ளி வாசல்களில் தொழுகை வரிசை கூடியிருக்க வேண்டும் (இருபது வருடங்களுக்கு முன் எப்படி சுபுஹு தொழுகை இரண்டு வரிசை இருக்குமோ அதே இரண்டு வரிசைதான் இன்றுவரை )  
5
இஸ்லாமிய சகோதரர்களுக்குள் பரஸ்பர ஒற்றுமை  கூடி இருக்க  வேண்டும் ஆனால் மாறாக கடந்த வருடங்களில் தெருக்களில் நடக்கும் குடும்ப சண்டைகளைவிட அதிக அளவில் பள்ளிகளில் தான் நடந்தேறியது.  வெட்க்கி தலை குனியும் அளவிற்கும், மாற்றுமத சகோதரர்கள் நமக்கு ஒற்றுமை பற்றி அறிஉரை கூறும் அளவிற்கு நம் நிலைமை...இந்த நிலைமை... இந்த கேவலம்... இந்த அலங்கோலம்... இந்த காட்டுமிராண்டித்தனம்... பதினெட்டு இருபது வருடங்களுக்கு முன் இல்லாமல் இந்த இடைப்பட்ட காலங்களில் மாற காரணம் யார்எப்படிபட்டவர்கள்? எந்த நோக்கமுள்ளவர்கள்? என்பதை சாமான்ய மக்கள் அனைவர்களுக்கும் தெரியும்.


அப்படி நல்ல மாற்றங்கள் வந்து இருந்தால் நிச்சயமாக தாங்கள் சப்போர்ட் பண்ணும் இயக்கத்தின் தலைவரையும் தலைமையையும்  இவ்வவு கேவலமாக விமர்சனம் செய்ய மாட்டார்கள் அதுவும் தங்களுடன் தௌஹீதே வாழ்க்கை என்று இருந்தவர்கள் இன்று காரி துப்புகின்றனர் ஆதலால் தயவு செய்து உண்மையிலேயே நம் சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் சமுதாய விசயத்தில் உங்களுடைய எந்த தலையீடும் இல்லாமல் தயவு செய்து உங்கள் மார்க்க வியாபாரத்தை மட்டும் செய்து கொள்ளவும் அதற்காக தியாகம் செய்து இயக்கத்தின்  மானம் மரியாதையை காப்பாற்ற நிறையவே அண்ணனின் ரசிகமாமனிகள் அதிகமாகவே இருக்கிறார்கள் இந்த குறிப்பிட்ட இயக்கம் இல்லாவிட்டால் சமுதாயம் ஒன்றும் இதற்கு மேலும் சீரழிந்து விடாது இந்த இயக்கம் இனி சமுதாய விசயத்தில் தலையிடாமல் இருக்க ஏதேனும் பணம் பட்டுவாடா தேவைபட்டால் உடனடியாக வழக்கம் போல் தங்கள் ரகசிய பேரத்தை பேச ஒட்டுமொத இஸ்லாமிய சமுதாய மக்களே அந்த நாளை எதிர் பார்துகொண்டிருகின்றனர்...

சமுதாய அக்கறை உள்ளவர்கள் போல்...  இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி (23.07.2010)மாலை 5.00மணிக்கு துபாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT) மர்க்கஸில் வைத்து நடைபெறும்தீர்வைத் தேடிநிகழ்ச்சிக்கு அனைத்து கடையநல்லூர் சகோதரர்களையும் அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அன்புடன் அழைக்கிறோம். என்று அழைத்து மேலும் ஊர்மானத்தை காற்றில் பறக்கவிட கங்கணம் கட்டிகொண்டிருபவர்களை முதலில் அப்புரபடுத்துவதும், சமுதாயம் சீராகவும், ஒழுக்கம் பெறவும், ஒற்றுமை பெறவும் நாம் செய்யும் முதல் வேலை இஸ்லாத்தை வியாபாரமாக பயன்படுத்தும் வேசதாரிகளை பகிஷ்காரம் செய்வதும் நடமாடவிடாமல் செய்வதே  நம்சமுதயதிற்கு தற்சமயம் தேவை... 
 
இப்படிக்கு,

நானும் ஒரு சமுக ஆர்வலர்.

அதற்கான நமது பதில் : 
அன்பிற்குரிய சகோதரர்கள் சமூக ஆர்வலன்(!) மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் பொழியப்படட்டுமாக…..
சமூக ஆர்வலனுக்கு முதலில்…..
தாங்களனுப்பிய மின்அஞ்சலில் ஏக வசனத்தில் கருத்துக்களையும்,அபவாதங்களையும் வீசியெறிந்துள்ள ஆர்வலரே! உங்களது ஆத்திரத்தையும் ஆவேசத்தையும், சமூகசீர்கேடுகளுக்கும்,ஒழுங்கீனமான செயல்களுக்கும் எதிராக கொட்டியிருந்தால் கூட அதனை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியாகவாவது அது இருந்திருக்கும். ஆனால் சீர்கேடுகளுக்கு எதிராக சிலிர்த்து எழ வேண்டிய தங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள்(!) குறைந்த பட்சம் வாய்மூடி மவ்னிகளாக இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து விட்டு சமூக அக்கரையோடு, எத்துனை பாரம்பரியமிக்க நமதூரில் இப்படிப்பட்ட அசிங்கமான நிகழ்வுகள் அன்றாடம் வாடிக்கையாகிவிட்டதே என்ற எண்ணக் குமுறலோடும்,வேதனையோடும் மனமொடிந்து போன சகோதரர்கள் ஏற்பாடு செய்த,அதில் கலந்து கொண்ட,அதற்கு உறுதுணையாக இருந்த அத்துனை சகோதரர்களையும் தாங்கள் கொச்சைப்படுத்தி விட்டீர்கள்! அத்தோடு அடிப்படையில் சில உண்மைக்கு முரணான தகவல்களையும்,மோசமான வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தியுள்ளீர்கள்.
முதலில் தாங்கள் ஒற்றுமை குறித்து கேள்வியெழுப்பி இருக்கின்றீர்! ஆம் நாங்கள் 1980 களில் ஏகத்துவ பிரச்சாரத்தை மக்கள்முன் எடுத்துவைத்த போது இந்த முஸ்லீம்சமுதாயம் எங்களை  தீண்டத்தகாதவர்களாக, குழப்பவாதிகளாக இன்னும் சொல்லப்போனால் சமூக பகிஷ்காரத்தினால் சொந்த ஊரில் வியாபாரம் செய்ய வழியில்லாமல் ஏன், குடிப்பதற்கு தண்ணீர் கூட மறுக்கப்பட்ட ஏகத்துவ சகோதரர்கள் ஊருக்கு ஒன்றிரண்டு பேர்தான் அப்போது இருந்தனர். ஆனால் அல்லாஹ்வின் கிருபையினால் இன்றைக்கு ஏகத்துவத்தின் அடிப்படையில் ஒற்றுமைகண்ட சகோதரர்கள் ஊருக்கு ஊர் ஆயிரமாயிரம் பேர் இருப்பதே நாங்கள் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் இல்லை என்பதற்கும், அதே நேரத்தில் ஏகத்துவ கொள்கைக்கு எதிராக எவர் வரினும் ஒன்றுபட்டு எதிர்ப்பவர்கள் என்பதற்கும் சான்றாகும். இன்றைக்கு கூட இறையருளால் இடஒதுக்கிட்டிற்காக இலட்சக்கணக்கில் மக்கள் ஒன்றுபட்டு அலைகடலென ஆர்ப்பரித்து வந்தார்களே அது எதனால் என்பதையும் தாங்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளீர்கள்.
சமுதாயத்தை வளர்த்தோம் என்று வாயால் முழம் அளப்பதாகவும்,அதனால் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் கேட்டிருக்கிறீர்கள்.
சகோதரரே! தாங்கள் தெரிந்து கொண்டே இதனை கேட்பது போல் தோன்றுகிறது இருந்தாலும் தங்களின் சிந்தனைக்கு சில இதோ
நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதி­லிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அவன் தனது சான்றுகளைத் தெளிவு படுத்துகிறான். அல்குர்ஆன்(3: 103)
இந்த வசனத்திற்கேற்ப,சமாதிகளுக்கும், சக மனிதர்களுக்கும் சாஷ்டாங்கம் செய்து கொண்டும்,இறைவனுக்கு இணைகற்பிக்கும் வரிகளைஇணைப்பாகக் கொண்ட மவ்லிதை இரைப்பாக ஒதிக்கொண்டும்,வாழ்வினூடாய் வந்துருத்தும் நோவினைகளுகெல்லாம் தாயத்தும்,தகடுகளும் தான் தக்க தீர்வென நம்பிக்கொண்டும், முதுகெலும்புள்ள ஆண்மகனாய் தன் துணைவிக்கு வாழ்வளிக்க வேண்டிய ஆடவன் அவளிடமே கையூட்டுப் பெற்றுக்கொண்டும்,பல்கி வளரும் வட்டியை வியாபாரம் என்று வியாக்கியானம் கொடுத்துக்கொண்டும்,எளிமையுடன் நடத்தப்பட வேண்டிய திருமண அவைகளை பொருளாதரத்தை வீணடிக்கும் சபைகளாக நடத்திக் கொண்டும், இன்னும் இது போன்ற நரகத்தின் விழிம்புக்கு அல்ல…. அதன் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும் அத்துனை மாபாவங்களும் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கப்பட்டு, இவையெல்லாம் நாளை மறுமையில் நரகிற்கு நம்மை கொண்டு செல்லும் என்று தெளிவாக எடுத்துச் சொன்னது யார்…? நாம் அதைச் சொன்னபோது நம்மவர்கள் மலர் மாலைகள் சூட்டிடவில்லை,அட்சதை துவி வாழ்த்திடவில்லை,சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிடவில்லை…. மாறாக கருங்கற்களாலும்,கொடுஞ்சொற்களாலும் மறுமொழி கூறினார்கள் என்பதே யாவருமறிந்த உண்மை.
அத்தோடு, 18 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சமுதாயத்தில் மாற்றமில்லையென்றும், தர்காக்களில் கூட்டம் அலைமோதுகிறது என்றும், பெண்களிடம் ஒழுக்க மாண்புகள் கூடியிருக்க வேண்டும் என்றும், வட்டி வாங்குவது அறவே இல்லாமல் போயிருக்க வேண்டும்என்றும், தொழுகைகளில் வரிசை கூடியிருக்க வேண்டும் என்றும், சகோதரர்களுக்குள் பரஸ்பர ஒற்றுமை  கூடி இருக்க  வேண்டும்என்றும் அடுக்கியிருந்தீர்கள். இதிலிருந்து இந்த பிரச்சாரப் பயணத்தில் நாம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது,முன்பை விட இன்னும் வீரியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை தான் தங்களின் கேள்வி உணர்த்துகிறது.இதனை செய்வதற்கான பொறுப்பும் கடமையும் எங்கள் மீது மட்டுமல்ல தங்களைப் போன்ற சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கிறது என்பதை சொல்லிக் கொள்கிறோம்.அதற்கு தங்களைப் போன்ற சமூக ஆர்வலகள் உதவி செய்யாமல் இருந்தால் கூட கொஞ்சம் உபத்திரம் செய்யாமல் இருப்பது நலமென்று கருதுகிறோம். தங்களின் கேள்விகளுக்கு பதிலாய் வரும் இறைவசனங்கள் இதோ
நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லைஎன்று (தூதர்கள்) கூறினர். அல் குர்ஆன்  (36:16.17)
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல் குர்ஆன் ( 28:56)
இவ்வசங்களின் அடிப்படையில் மக்களுக்கு சத்தியத்தை தெளிவாக எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறோம்.மக்கள் நேர்வழி பெறுவதற்கும்,சமூக மாற்றத்திற்கும் இறைவனின் பேருதவியே காரணம் என்பதனை சொல்லிக் கொண்டு, தீர்வைத் தேடிஎன்ற சமூக நலன்நாடும் நன்நிகழ்வை நாம் நடத்தியதற்கு காரணம்
எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாதவரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை (அல்குர்ஆன் 8:53)

என்ற திருமறை வசனம் தான். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாம் கேள்விப்படும் இத்தகைய சீர்கேடுகளுக்கெதிரான இந்த நிகழ்ச்சி தங்களைப் போன்ற, விமர்சனங்களை மட்டும் செய்து கொண்டு சமூக ஆர்வலனாக காட்டிக் கொள்ளும் சகோதரர்கள் நடத்திய நிகழ்ச்சியல்ல அது…. இறைவன் நாடினால் இதுபோன்ற சமூக சீர்கேடுகளுக்கும்,கலாச்சார சீரழிவுகளுக்கும் சாவுமணியடிக்கும் நிகழ்ச்சியாக அது அமையும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி முடிக்கிறோம்.

இப்னுஸித்தீக்
கடையநல்லூர்







2 comments:

கு.ஜ.அப்துல் பாசித் said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச்சகோதரன் சமுக ஆர்வலன் அவர்களுக்கு உங்களுக்கு சரியான பதிலை சகோதரர் இப்னு ஸித்திக் வழங்கி விட்டாலும் எனது தாழ்மையான கருத்துக்களை உங்களுக்கு வழங்குவதில் உங்களுக்கு!எந்தவிதமான சிரமமுமிரூக்காது என்று நினைக்கிறேன்.நீங்கள் சுமற்றும் மொத்த குற்றச்சாட்டும் தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஏன் வளர்ந்தது என்ற வெறுப்பில்! முடிகிறது எனது பதில் நமதூரில் உண்மையான தவ்ஹீத் வளர்ந்திருந்தால் நமது மானம் இனையத்தில் நாறியிருக்காது உங்களை தவ்ஹீதிற்க்கு எதிராக இப்படி அவதூறுகளை எழுத சொல்லியிருக்காது நமது பென்களை ஆபாசமாக உடையனியவைத்திருக்காது உங்களை போன்றவர்கள் தவ்ஹீத் பற்றி தெறிந்திருந்தும் வயிரு வளர்க்க வேசம் போடுவதைபோன்று நமது பென்களும் வேசதாறிகளை நம்பி படிஇரங்கியிருக்கமாட்டார்கள் ஆகவே சகோதரரே உங்களை நான் அழைக்கிறேன் வாருங்கள் உண்மையான தவ்ஹீ(இஸ்லாத்)தை மக்களுக்கு எடுத்துச்செல்வோம் உண்மை அவர்களை சென்றடைந்தால் ஒருக்காலும் அவர்கள் விபச்சாரம் பக்கம் செல்லமாட்டார்கள் சகோதரரே தனிமனித விறுப்பு வெறுப்புகளை களைந்து நல்ல மனதோடு உண்மையின் பக்கம் வாருங்கள் உண்மையான பெயரோடு .உங்களுக்கு வல்ல நாயன் விருப்பு வெருப்பு இல்லாத நல்ல மனதையும் நல்ல தவ்ஹீதையும் வழங்கூவானாக .ஆசையில் உங்கள் நல விரும்பி கு.ஜ.அப்துல் பாசித்
அஸ்ஸலாமு அலைக்கும்

ANBU said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சமூக ஆர்வலர் என்ற புனைபெயரில் தன்னை காட்டிக் கொள்ள விரும்பாத இந்த செயலே இவர் கூறுவது உண்மை அல்ல என்பதற்கு முதல் ஆதாரம். தனது முகவரியுடன் எழுதவேண்டியது தானே? அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த 18 வருடங்களால் எந்த மாற்றமும் காணவில்லை என்று சொன்னதுக்கு, இப்னு ஸித்தீக் எவ்வாறெல்லாம் மாற்றம் கண்டிருக்கிறோம் என்று தெளிவாக விளக்கியுள்ளார்கள். மறுமையில் இதன் பயனை அறிந்து கொள்வார்கள் ச.ஆர்வலர் உட்பட. நாம் எவ்வளவு தான் மார்க்க விஷயங்களை, ஒழுக்கங்களை கற்றுக் கொடுத்தாலும், ஒழுக்கக்கேடின் பிறப்பிடமாக ஆரம்ப கல்வி நிறுவனங்கள் இருந்து வருகிறது. நமது ஊரைச் சுற்றி படை எடுத்திருக்கும் ஆங்கில கல்வி போதிக்கபடும் Primary/Matriculation பள்ளிகளில் குழந்தைகளிலிருந்தே ஆடல், பாடல், சினிமா கூத்தாடிபோல், ஆண் பெண் கட்டியணைத்தல் போன்ற காட்சி நடித்து காட்டல், பெண்களை கேலி செய்வது போல் காட்சி நடித்துகாட்டல் போன்ற ஒழுக்க கேடான செயல்களை ஆண்டு விழா என்ற பெயரில் நடத்துவதை ஒட்டு மொத்த கல்வி நிறுவனங்களையும் நிறுத்த சொல்லி வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். அந்த நிறுவனங்களில் தங்கள் பிள்ளைகளை சேர்க்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும். இது போன்ற பள்ளிகளை பள்ளிவாசல் நிறுவனங்களும், முத்தவல்லிகளும், தலைவர்களும் கூட நடத்துகிறார்கள் என்பது தான் மிகக் கேவலமான ஒன்று. அதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. ஆகவே மார்க்க கல்வி, ஒழுக்கம்,நன்னடத்தை இவை எல்லாம் குழந்தைகளிலிருந்தே ஊட்டப்பட வேண்டும். மேலும் நானும் தவ்ஹீத்வாதிதான் என்று இன்று சொல்கிற சிலர் வாங்க வேண்டிய வரதட்சணை, பொன், பொருள்களை பெண்வீட்டில் வாங்கிவிட்டு அதன் பிறகு தான் வருகிறார்கள் சமுதாயத்தில் நல்லவர்கள் என்று பெயர் வாங்குவதற்க்காக.இந்த நிலையும் மாற வேண்டும். "எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை
மாற்றிக் கொள்ளாதவரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை" (அல்குர்ஆன் 8:53) என்று அல்லாஹ் கூறுவதை போல். ஜெஸாகல்லாஹ் கைர்.

அல் அமீன் - ஜித்தா

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP