கடையநல்லூரில் சமீபகாலமாக நடந்து வரும் சமூக அவலங்களுக்கு நிரந்தர தீர்வை தேடி......................

Monday, July 19, 2010



அல்லாஹ்வின் திருப்பெயரால்……



இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி (23.07.2010)மாலை5.00 மணிக்கு துபாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT) மர்க்கஸில் வைத்து நடைபெறும்தீர்வைத் தேடி நிகழ்ச்சிக்கு அனைத்து கடையநல்லூர் சகோதரர்களையும் அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக்கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும்கற்களுமாகும் அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியத்தில் மாறுசெய்ய மாட்டர்கள்.கட்டளையிடப்பட்டதை செய்வார்கள்.
(அல்குர்ஆன் 66:6)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பளிகளே உங்கள் பொறுப்புகளை பற்றி விசாரிக்கப்படுவீர்கள் மக்களை ஆளும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளி அவர்களை பற்றி அவர் விசாரிக்கப்படுவார் ஆண் தன் குடும்பத்திற்கு பொறுப்பாளி அவர்களை பற்றி அவன் விசாரிக்கப்படுவான் பெண் தன் கணவனின் வீட்டிற்க்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளி அவர்களை பற்றி அவன் விசாரிக்கப்படுவாள் அடிமை தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளி அவன் அதை பற்றி விசாரிக்கப்படுவான் எச்சரிக்கை நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி உங்கள் பொறுப்புகளைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
                       
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) புகாரி 2554

சமீப காலமாக நமது ஊரில் நடந்து வரும் சம்பவங்கள் நம்மை கண் கலங்க வைக்கின்றன கட்டுப்பாட்டிலும்கலாச்சாரத்திலும் நற்பேறு எடுத்த ஊர் இன்னும் ஆலிம்களும் நிறைந்த ஊர் என்று பெயர் பெற்ற நமது ஊரிலா இப்படிபட்ட நிகழ்வுகள் என்று வியக்க வைக்கின்றன .
வளைகுடாவில் வந்து சம்பாதிப்பதற்க்காக தனது குடும்பத்தை விட்டு விட்டு பல துன்பங்களுக்கும்துயரங்களுக்கம் மத்தியில் வெயிலிலும்மழையிலும் தனது வாழ்கையை கழித்து கொண்டிருக்கும் சகோதார்கள் நாளை என்ன நடக்குமோ நமது வீட்டின் நிலை என்னவோ என்று ஏங்கி தன்னையே அழித்துவிடக்கூடிய நிலையில் உள்ளனர்.
            ஊரில் பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் நாளை நமது மகளின் நிலை என்னவோ?படிக்கவைத்த பெற்றோர்கள் நமது மகளின் நிலை என்னவோ? என்று ஏங்கி கலாம் கழிக்கவேண்டிய நிலை.
 இத்தகைய சங்கடமான நிலை ஏன்இது யாரால் ஏற்பட்டது இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு சமுதாயத்திலிருந்து வரும் பதில்
  1. மார்க பிரச்சாரம் செய்யவேண்டும் மார்க்கத்தை மக்களுக்கு குறிப்பாகபெண்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
  2. பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் வீடுவீடாக மறுமை சிந்தனை, தனி மணித ஒழுக்கம் சம்பந்தமாக நோட்டிஸ்கள் கொடுக்கவேண்டும்.
  3. முன்பு நமது ஊருக்கென்று கட்டுப்பாடு இருந்தது அதை மீண்டும் கொண்டுவரவேண்டும்.
  4. இப்படி செய்பவர்களை வெட்டி வீழ்த வேண்டும்.
  5. மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வீதிவீதியாக இழுத்து செல்லவேண்டும்.
  6. இன்னும் சிலர் நான் சுத்தமாணவன் என்று சொல்லி நடந்ததை பிறர் மீது பழியை போட்டு தப்பிப்பது.
  7. இன்னும் சிலர் எது நடந்தாலும் எனக்கனெவென்று கண்டு கொள்ளாமல் இருப்பது.

இதில் முதல் கருத்துகளும் ஊரின் மீது அக்கறையால் வரும் பதில் ,அடுத்து கருத்துக்களும் ஊரின் மீது அக்கறை யில்லாமல் உயிரோடு இருந்தும் இல்லாதது போல் இருப்பவர்களிடம் இருந்து வரும் பதில் 

மேல குறிப்பிட்ட கருத்துக்கள் ஏனென்றால்,சமீபத்தில் நடந்த செயல் நம்மை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. இதற்க்கு முன்பு நடந்தவைகள் அவ்வளவாக வெளியில்தெரியவில்லை. ஆனால் இந்த நிகழ்வு பத்திரிக்கைகளில்நெட்டில் தலைப்பு செய்திகளாக இன்னும் ஒரு சில வாரப்பத்திரிக்கையில் தொடர் செய்தியாக வெளிவந்து கொண்டுயிருக்கின்றன.
நமது சகோதர்கள் மனவருத்தத்துடன் அந்த செய்தியின் லிங்கை தனது மெயில் மூலமாக அனுப்பி தனது மனவருத்தத்தை சக சகோதர்களிடம் பகிர்ந்து கொண்டனர். பிற ஊர் சகோதர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் வெட்க்கி தலைகுனிகின்றனர்
இத்தனைக்கும் மத்தியில் அந்த ஆபாச படத்தை மெயில் மூலமாகவும்SMS மூலமாகவும் அதை பரவலாக்கி நமது சமுதாயத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய நாசக்காரர்கள். அதை காமக் கண்கொண்டு பார்த்தபார்க்க துடித்த காமக் கொடுடர்கள்.

இவர்களுடைய மனைவிக்கோ அல்லது சகோதரிகளுக்கோ,தாய்க்கோ இப்படி நிலை ஏற்பட்டால் இப்படி பரப்புவார்களாஅல்லது அதை பார்க்க துடிப்பார்களா?
அதை வெளியில் பரப்பியவர்கள் யாராகயிருந்தாலும் அவர்கள் சமுதாயத்தின் துரோகிகளே! அவர்களை அல்லாஹ் சபிப்பானாக! என்று கூட பிராத்திக்கலாம்
ஏனென்றால் அந்த பெண்ணின் வாழ்க்கை மட்டும் பரிபோகவில்லை நமது ஒட்டு மொத்த சமுதாயத்தின் மானமும் சேர்த்து தான். அவளுக்கு இருக்கும் அந்த ஆறுவயது பிஞ்சு குழந்தையின் வாழ்கை நிலைதனது முதல் வகுப்பு தோழிகள் அந்த பிஞ்சிக் குழந்தையிடம் எல்லோரும் உனது அம்மா போட்டோவை செல்போனில் பார்கிறார்கள், நீயும் பார்த்தாயாஎன்று கேட்டும் போது எதையும் சொல்லதெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலை.
இப்படிபட்ட நிகழ்வுகளுக்கு யார் பொறுப்புதாரிகள்?

ஊர் ஜமாத்தார்கள்ஆலிம்கள்தாய் தந்தையர்கள்இளைஞர்கள்,வெளிநாட்டில் காசுக்காக வந்து கிடப்பவர்கள் இப்படியாக ஒவ்வொருவரும் அடுத்தவர்கள் மீது பழியை போடுகிறோம்.
எனவே இதற்கு நிரந்தரமான் ஒர் தீர்வு வேண்டும் அதை நமது ஊரில் உள்ள ஜமாத்தார்கள் எடுத்து செயல் படுத்த வேண்டும்.இதற்கான ஒரு நிரந்தர தீர்வு காண சமுதாய அக்கரையுள்ள அனைத்து சகோதரர்களும் தாங்களின் கருத்தை பதிவு செய்ய........
 இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி (23.07.2010)மாலை5.00 மணிக்கு துபாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT) மர்க்கஸில் வைத்து நடைபெறும்தீர்வைத் தேடி நிகழ்ச்சிக்கு அனைத்து கடையநல்லூர் சகோதரர்களையும் அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அபுதாபி : 
சகோ.அப்துல் சலாம் - மொபைல் நம்பர் : 00971556679320
சகோ.ஷாகுல் - மொபைல் நம்பர் : 00971559385536
துபாய் : 
சகோ.முஹம்மது இஸ்ஹாக் - மொபைல் நம்பர் : 00971554725204
சகோ.முஹம்மது நாசர் - மொபைல் நம்பர் : 00971508486296
ஷார்ஜா : 
சகோ.ஷாகுல் - மொபைல் நம்பர் : 00971559905714
அஜ்மான் : 
சகோ.சாதிக் - மொபைல் நம்பர் : 00971558646184

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP