பொட்டல்புதூர் தர்ஹா முன்பு இஸ்லாமிய பொதுக்கூட்டம்
Sunday, April 18, 2010
நெல்லை மாவட்ட்ம் பொட்டல்புதூரில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் 10.04.2010 (சனி) இரவு 7 மணியளவில் நகரத் தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் ஜபருல்லாஹ், மாவட்டச் செயலாளர் செய்யது அலி, அரசு நலத் திட்டச் செயலாளர் சுலைமான், மாவட்ட பேச்சாளர் முஹம்மது கோரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா, மாநில தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக, மதரஸதுல் தவ்ஹீத் மாணவ, மாணவியர்களும் உரையாற்றினர்.
நெல்லை மாவட்டம் பொட்டல்புதூரில் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் என்றாலே நமது மாவட்ட கிளை ஜமாஅத்தார்களுக்கு ஒரு சந்தோசமும் உற்சாகமும் ஏற்படும். மாலை 4 மணியிருந்து கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, மேலப்பாளையம், சங்கரன்கோவில், வீராணம், வாசு, பத்தமடை, அம்பை போன்ற கிளைகளிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் பொட்டல்புதூர் தர்ஹா முன்பு உள்ள திடல் சங்கமித்தனர்.
கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக மாநில தலைவர் அவர்கள் முஹையதீன் ஆண்டவர் தர்ஹாவிற்குள் என்னதான் இருக்கின்றது என்பதை பார்வையிட தர்ஹாவிற்குள் நுளைந்த போது வாசலில் இருந்த பூசாரிகள் எங்களை அன்புடன் வரவேற்று காணிக்கையை மட்டும் உண்டியலில் போடாமல் தங்களிடம் தரவேண்டுமென்ற நிபந்தனையுடன் தர்ஹாவின் கருவறை(மூலஸ்தானம்) வரை செல்ல அனுமதித்தனர். உள்ளே மின்சார விளக்குகளோ கபருஸ்தானம் இல்லாமல் 20க்கும் மேற்பட்ட குத்து விளக்குகளில் எண்ணெய் ஊற்றப்பட்டு தீபம் எரிந்து கொண்டிருந்தது. மேலும் முஹையதீன் ஆண்டவரின் பாதம் என்று எழுதப்பட்ட ஒரு செருப்பும் இருந்தது. இதனை ஆண்களும் பெண்களும் பயபக்தியுடன் வணங்குவதைக் கண்டு மாநில தலைவர் அவர்கள் வேதனை அடைந்ததார். அங்குள்ள விசிடி கடைகளில் பீ.ஜே அவர்கள் பேசிய விசிடிகள் விற்பனைக்கு இருப்பதைக் கண்டு ஆறுதல் அடைந்து திரும்பினோம்.
ஆண்டு தோறும் ரபியுல் அவ்வல் பிறை 1 ருந்து 10 வரை முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி என்ற பெயரில் இஸ்லாத்திற்கு விரோதமான ஏராளமான அனாச்சாரங்களும் ஷிர்க்கான காரியங்களும் நடந்து வருவது வழக்கம். இதை எதிர்த்து நகர தலைவர் அப்துல் காதர் அவர்கள் தனி நபராக நின்று ஆண்டு தோறும் தர்ஹாவிற்கு எதிராக அதன் எதிரிலேயே கூட்டம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment