இஸ்லாமிய ஆட்சியின் (?) இலட்சணம் பாரீர்!

Thursday, March 18, 2010

கடையநல்லூர் ஏபி சில்க்ஸ் அருகில் ஜுலை 4 ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாட்டிற்கு சுவர் விளம்பரம் செய்வதற்காக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் சுவரின் உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டு டிஎன்டிஜே ஃபுல் என கருப்பு மையினால் எழுதிப் போடப்பட்டிருந்தது.
ஆனால் நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று புறப்பட்டு தற்போது கொட்டடித்துக் கொண்டும், குழலூதிக் கொண்டும், இசைப்பாடல்களுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டும் கூத்தடிக்கும் கூட்டத்தினர் தவ்ஹீத் ஜமாஅத் வெள்ளையடித்த இடத்தில் தங்கள் விளம்பரத்தை எழுதி இஸ்லாமிய ஆட்சியின் (?) நடைமுறையைப் பின்பற்றினர்.

தொடர்புக்கு என்று இவர்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்றுரைத்த மார்க்கத்திலே கொடிவணக்கத்தை புகுத்தியவர்களிடம்,

விபச்சாரத்திற்கு நிகராக இசையை நபியவர்கள் கூறியிருந்தும் இசையடித்து கூத்தடிக்கும் இவர்களிடம்,

யூதர்களிடம் கலாச்சாரமாகிய டிரம்ஸ் அடிப்பதையும், கிறிஸ்தவர்களின் கலாச்சாரமாகிய குழலூதுவதையும்,

பிறமனிதர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தும் யூத கிறிஸ்தவ கலாச்சாரத்தையும் பின்பற்றும் இவர்களிடம்

நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா என்ன?

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP