மார்மக்காய்ச்சல்
Saturday, January 23, 2010
மர்ம காய்ச்சலுக்கு 18 பேர் மரணம் பயந்துபோய் இருக்கிறது கடையநல்லூர்,கடந்த ஒன்னரை மாதத்தில் இன்று வரை என்ன காய்ச்சல் என்று தெரியாமல் நான்கு முஸ்லீம்கள் உட்பட பதினெட்டு பேர் இறந்துவிட்டனர். வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் எண்ணிக்கை காய்ச்சலின் காரணமாக குறைந்து விட்டது.நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி பொதிகைமலை அருகில் அமைந்துள்ள முஸ்லீம்கள் அதிக அளவில் வாழ்கின்ற ஒரு பெரிய நகராட்சி கடையநல்லூர் இங்கு உள்ள ஆண்களின் அதிக எண்ணிக்கை அரபு நாடுகளில் வேலை செய்து இந்தியாவுக்கு அந்நிய செலவானிகள் பெற்று தருகின்ற நகரத்தை இன்று மருமகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு கை , கால் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர் என்ன நோய் என்று தெரியமலே சுகாதார துறை தினறிக்கொண்டு இருக்கறது.
டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் மர்ம காய்ச்சலுக்கு மூன்று குழந்தை மரணமடைந்ததை தொடந்து சமூக பணியில் அக்கரைக் கொண்ட தவ்கீத் ஜமாத் சகோதரர்கள் மருத்துவமனைக்கு சென்று நோயளிகளைக் சந்தித்து விட்டு தீவிர நடவடிக்கை எடுக்க டாக்டர்களை கேட்டுக் கொண்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சி தலைவரையும் , சட்ட மன்ற உறுப்பினரையும் தொடர்பு கொண்டு கடையநல்லூரில் ஏற்பட்டிருக்கும் உயிர் கொல்லி நோயை பற்றி சைபுல்லா அவர்கள் தெரிவித்தனர் உடனே மாவட்ட ஆட்சி தலைவர் மு.ஜெயராமன் அவர்கள் மருத்துவமனை;க்கு வருகை தந்து ஆய்வியை மேற்கொண்டார். மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயளிகள் படுத்து இருப்பதை பார்த்து மாவட்ட ஆட்சிதலைவரின் பொது நிதியில் இருந்து 100 படுக்கைகளை வாங்க உத்தரவுவிட்டார். மேலும் தவ்கீத் ஜமாத் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு மருத்துவமனைக்கு தேவையான படுக்கைகளை வழங்கு மாறு கேட்டுக் கொண்டார். தவ்கீத் ஜமாத் நகர நிர்வாகிகள் சைபுல்லா அவரிகளின் தலைமையில் நகராட்சி,மருத்துவமனையின் குறைகளை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெருவிக்கப்பட்டது.
மர்ம காய்ச்சல் தீவிரம் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை:-
நாள்தோறும் ஆயிரத்து ஐநூறு பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறப்பின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்ததை தொடந்து முதல்வருக்கு மிகவும் நெருக்கமான சட்டமன்ற உறுப்பின்ர் சா.பீட்டர்; அல்போன்ஸ் அவர்கள் முதல்வரை சந்தித்து தன் தொகுதியை மர்ம காய்ச்சலால் தினசரி மக்கள் செத்துக் கொண்டிருப்பதை எடுத்துச் சொன்னார் உடனே முதல்வர் அவர்கள் சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் விளையாட்டு துறை அமைச்சர் டி.பி;.எம் மைதீன் கான் சுகாதார துறை முதன்மை செயலாளர் சுப்புராஜ் ,சுகாதார துறை இயக்குநர் இளங்கோ , இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி முதன்மைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோரை உடனடியாக அனுப்பி மேலப்பாளையம், அம்பை, கடையநல்லூர் ஆகிய இடங்களுக்கு அனுப்பிவைத்தார். வரும் வழியில் ஆழ்வார் குறிச்சி சப்-இ.ன்ஸ்பக்டர் கொல்லப்பட்டதை நேரில் பார்த்து விட்டு மாலை 5 மணிக்கு பயத்துடனும் பதற்றதுடனும் மருத்துவனைக்கு வருகை தந்து அவசர அவசரமாக நோயளிகளை சந்தித்து மருத்துவனையை ஆய்வு செய்துவிட்டு n;டங்கு, சிக்கன் குனியா , எலி காய்ச்சல் போன்றவை கிடையாது என்று சொல்லிலிட்டு அவசர அவசரமாக சென்று விட்டனர் அன்றைய தினமே டெங்கு காய்ச்சலால் திருநெல்வேலி ஷpபா மருத்தமனையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த கடையநல்லூரில் உள்ள இல்லத்தார் தெருவை சார்ந்த அப்துல் பாசித் (25வயது) இளைஞர் ,சௌர்ண லதா(13) , கிருஷ;னவேனி(10) ஆகிய மூன்று நபர்கள் அமைச்சர் வந்த அன்றே இறந்து விட்டனர். கடந்த காலங்களில் காலராவுக்கு தொடர்ந்து மக்கள் மரணமடைந்தார்களோ அதுபோல் அச்சம் மக்களுக்கு வந்துவிட்டது. அரசு மருத்துவனையில் நீண்ட வரிசையில் நின்று ஒரு நாளைக்கு இரண்டாயிரம் புறநோயாளிகளும் இரநூறு உள் நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டநர். மேலும் தனியார் மருத்துமனை நிறைந்து வழிந்தது. இதில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் மட்டும் ரூபாய் 1கோடிக்கு மேல் நெல்லை,மதுரை போன்ற ஊர்களில் உள்ள தனியார் மருத்துவனையில் செலவு செய்து உயிர் பிளைத்துள்ளனர்.
இந்த விஷக்காய்ச்சல் தாக்கி அடுத்த சில மணி நேரத்தரில் அவர் இரத்ததில் உள்ள வெள்ளை அனுக்கள் ஒன்னரை லட்சத்தில் இருந்து வெறும் ஐயாயிரமாக குநைந்து விடுகிறது இதன் காரணமாக நல்ல நிலையிலும் உள்ளவரும் இறந்துவிடுகிறார் இதன் காரணமாக தினம் தோறும் இரத்தம் கேட்டு வந்துள்ளனர். நமது ஜமாத் மற்றும் 300 யூனிட் இரத்தம் தானம் செய்துள்ளது.
மெகா மருத்துவமுகாமில் தவ்கீத் ஜமாத்திற்கு பாராட்டு.
கடந்த 19.01.2010 அன்று தவ்கீத் ஜமாத் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மெகாமருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தார் இதில் 25டாக்டரகளும்,200துணைமருத்துவர்களை அழைத்து ஸ்கேன்,ஈஜிஸி.ரத்தபரிசோதனை,ரத்த அழுத்தம், கண்பார்வை,சித்த மருத்துவர்களால் கை,கால் வலிக்கு நில வேம்பு கசாயம் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தனர். இம் முகாமில் 5500 பேர் பயனடைந்தனர். இம் முகாமை தொடங்கி வைத்து சிறப்பு உரை ஆற்றி பேசும் பொழுது இந்த நோயை கட்டு படுத்த பொதுமக்கள் அனைவரும் முழுமையாக ஒத்துளைக்;க வேண்டும் சுற்றுபுறத்;தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் போன்ற சமுதாய அமைப்புகள் இந்த நோயை தடுப்பதற்கு பல வழிகளில் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததையும் இன்று இம் முகாமிற்கு வருகை தந்த மருத்துவ குழுவிற்கு மதிய உணவு ஏற்பாடு செய்ததை நானும் மாவட்ட ஆட்சி தலைவரும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். இறுதியில் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவரி;டம் நகர நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்தார். நமது ஜமாத்தின நற்பெயருக்கு சான்றாக இருந்தது குறிபிடப்பட்டது. காய்ச்சலால் இறந்து போன குடும்பத்தாருக்கு நிவரன தொகையை பெற்று தருமாறு தவ்கீத் ஜமாத் சார்பில் கோரிக்கை மனுவை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரி;டம் கொடுக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் முதல்வரிடம் பேசி வாங்கி தருவதாக உறுதியளித்தார்.
குறிச்சிசுலைமான்
கடையநல்லூர்
.jpg)


0 comments:
Post a Comment