கிட்னி செயலிழந்த சிறுவனுக்கு உதவி செய்வீர்

Saturday, October 10, 2009

அல்லாஹ்வின் திருப்பெயரால்..........
நல்லுள்ளம் கொண்டோரே வாரி வழங்குவீர்.
கடையநல்லூர் ரஹ்மானியா புரம் 7 வது தெருவில் வசித்து வரும் கமால் சாஹிப் மற்றும் முஹைதீன் பாத்திமா ஆகியோரின் ஓரே மகன்  அஹ்மது ஹசன் (வயது 7) . இச்சிறுவனின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. இதனால் இச்சிறுவனின் உடல் நிலை நாளுக்கு நாள் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. இச்சிறுவனின் தாய், தந்தையர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இச்சிறுவனுடைய தந்தை தன்னுடைய மகனுக்காக தன்னுடைய ஒரு கிட்னியை வழங்குவதற்கு முன்வந்துள்ளார். ஆனால் மருத்துவச் செலவிற்காக இறையுதவிக்கு அடுத்தபடியாக கடையநல்லூர் சகோதரர்களின் உதவியை நாடிவந்துள்ளார். இதற்கான மருத்துவச் செலவு 3.5 இலட்சம் வரை ஆகலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையின் மூலம் முடிந்த அளவு குறைந்த செலவில் இச்சிறுவனுக்கான கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கு விரைவான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. தற்போது இச்சிறுவனை மருத்துவத்துவத்திற்காக சென்னை கொண்டு செல்வதற்காக முதல் கட்டமாக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் சார்பாக இச்சிறுவனின் தந்தையிடம் ரூபாய் 10,000 (பத்தாயிரமும்) துபாய் சகோதரர் பேட்டை பீர் ஒலி அவர்கள் சார்பாக ரூ 10,000 (பத்தாயிரமும்) மொத்தம் 20,000 (இருபதாயிரம் ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.ஏழ்மை நிலையில் தங்களுடைய மகனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக போராடி வரும் இந்த ஏழைச் சிறுவனுக்காக நமது சகோதரர்கள் தாராளமாக தங்களது உதவிகளை வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.



உதவி செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
அப்துந் நாஸிர் : 9865584000
ஜஃபருல்லாஹ் :  9976670014
எஸ்.எஸ்.யு. ஸைஃபுல்லாஹ் : 9442642030

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP