கடையநல்லூரில் மாபெரும் இஸ்லாமிய மார்க்கக் கூட்டம்

Wednesday, October 13, 2010

ல்லாஹ்வின் உதவியால் கடையநல்லூர் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 12.10.2010 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் காயிதே மில்லத் ஈத்கா திட ல் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

மாநில மேலாண்மைக் குழு ஊறுப்பினர் ஸ்.ஸ்.யூ. ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் டிஎம்.ஜபருல்லாஹ், மாவட்ட நலத்திட்ட அணி செயலாளர் சுலைமான் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் எம். பக்கீர் முஹம்மது ல்தாபி அவர்கள் ”போலி ஒற்றுமை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியில் நகர தலைவர் முஹம்மது கோரி அவர்கள் நன்றி கூறினார்கள். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாட்டை 32, 33 வது வார்டு மக்கா நகர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இப்பொதுக்கூட்டத்தில் கடையநல்லூரைச் சுற்றியிருக்கின்ற சங்கரன்கோவில், வீராணம், வாசுதேவநல்லூர், புளியங்குடி, தென்காசி, அச்சன்புதூர், வடகரை, வாவா நகரம், செங்கோட்டை, அம்பை, வல்லம், சொக்கம்பட்டி போன்ற சுற்றுப் புறங்களி ருந்து நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

















இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • ஏக இறைவனை மறுத்து, இணை வைத்து நிரந்தர நரகத்திற்கு இழுத்துச் செல்லும் சமாதி வழிபாட்டை முஸ்லிம்கள் முற்றிலும் கைவிடவேண்டும்.
  • முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் அல் குர்ஆனையும் குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்.
  • முஸ்லிம் சமுதாயத்தில் மண்டிக் கிடக்கின்ற மூடப்பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், வட்டி, வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளை முஸ்லிம்கள் கைவிடவேண்டும்.
  • ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும் அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்கவேண்டும் என்பதுதான் உரிமையியல் (சிவில்) வழக்குகளில் உலகம் முழுக்க பின்பற்றப்படும் சட்ட நடைமுறையாகும். பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப் பஞ்சாயத்து பாணியில் அமைந்திருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
  • இத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படவுள்ளது. உச்ச நீதி மன்றத்திலாவது நியாயம் கிடைக்கும் என்று இந்தியாவிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அறிவு ஜீவிகளும் எதிர்பார்க்கின்றார்கள். அதுவரை அமைதி காக்கவேண்டும் என்று முஸ்­லிம்களையும் பொதுமக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
  • கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட செங்கோட்டை ஈரோடு பாசஞ்சர் ரயில் உடனடியாக இயக்கப்படவேண்டும்.
  •  கடையநல்லூர் ரயில் நிலையத்தில் கணினி மூலம் முன்பதிவுச் சீட்டு வழங்குவதற்காக தனி அலுவலரை நியமிக்கவேண்டுமென ரயில்வே துறையைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • தென்காசியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டமும் கடையநல்லூரை மையமாகக் கொண்டு தனி தாலுகாவும் அமைக்கப்படவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • முஸ்லிம் பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட வீடுகளுக்கு 10 மடங்காக உயர்த்தப்பட்ட வீட்டு வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென்று நகராட்சியையும் தமிழக உள்ளாட்சித் துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.

  • ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக்காகவும் முஸ்லிம்கள் தொழில் செய்வதற்கும் வீடு கட்டுவதற்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா கடன்  வழங்கப்படவேண்டும்.
  • கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக போக்கிட 21 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்ட குடிநீர் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும். 
  • 32, 33 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு மேல் செல்கின்ற உயர் அழுத்த மின் கம்பிகளை உடனடியாக மாற்றியமைக்க தமிழ்நாடு அரசு மின் வாரியத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • நகராட்சி அருகில் உள்ள வாரச் சந்தையை உழவர் சந்தையாக மாற்றி அமைக்கவேண்டுகிறோம்.
  • அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியை அரசு கலைக் கல்லூரியாக தரம் உயர்த்த தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளிலுள்ள சுடுகாடுகள் அனைத்தையும் மின்மயமாக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • பள்ளி மாற்றுச் சான்றிதழில் உள்ள பிறப்புத் தேதியை அடிப்படையாகக் மட்டும் வைத்துக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் பிறப்புச் சான்றிதழை வழங்கிட தமிழக அரசு உடனடியாக அரசாணை பிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
  • பொதுமக்களின் நலன் கருதி மின்கட்டணம் செலுத்தும் இடத்தை நகரின் மையப்பகுதியில் அமைத்திட தமிழ்நாடு மின் வாரியத்தை கேட்டுக்கொள்கிறோம்.
  •  ஆடறுக்கும் மையம், ஆளறுக்கும் (மார்ச்சுவரி) மையம் இரண்டும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் அமைந்துள்ளன. இதை உடனடியாக மாற்றியமைக்க நகராட்சியைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • கடையநல்லூர் மெயின் பஜார் பகல் நேரங்களில் கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் மெயின் பஜாரில் வந்து செல்வதற்கு தடை விதிக்க காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • காவல் நிலையம் அருகிலுள்ள ரயில்வே பீடர் ரோட்டிலேயே தக்காளி மொத்த வியாபாரம் நடைபெறுகிறது. இதனால், அவசர நோயாளிகள் மருத்துவமனைக்கும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பயணிகளின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கபடுகிறது. இதை உடனடியாக மாற்று இடத்திற்கு அப்புறப்படுத்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஆபாச சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • தெருநாய், பன்றி, இக்பால் நகர் பாழடைந்த கிணறு போன்றவற்றால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவையனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்திட நகராட்சியைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சுற்றி சுகாதாரக் கேடும் நடமாடும் பழவியாபாரம், நடமாடும் இட் க்கடை போன்றவைகளால் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. உடனடியாக இவையனைத்தும் அப்புறப்படுத்தப்படவேண்டும் என நகராட்சியையும் காவல்துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.

1 comments:

RASMIN M.I.Sc (India) said...

அஸ்ஸலாமு அலைக்கும்
கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் மூலமாக பல நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடத்தப் படுகிறது அந்த வகையில் காலத்திற்கேற்ற இந்தத் தலைப்பு சகோதரர் அல்தாபி மூலம் கடையநல்லூரில் பேசப்பட்டது வரவேற்கத் தக்கதே ஏற்பட்டுக் குழுவுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக

RASMIN M.I.Sc
E-mail : rasminmisc@gmail.com
Web :www.rasminmisc.tk

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP