கடையநல்லூர் டிஎன்டிஜே நகர நிர்வாகிகள் நெல்லை மாவாட்ட டிஜிபி வுடன் சந்திப்பு
Thursday, July 22, 2010
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 21. 07. 2010 (புதன்) மதியம் 3 : 30 மணியளவில் டி.என்.டி.ஜே. மேலாண்மைக் குழுவைச் உறுபினர் சகோ.எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமையில் திருநெல்வேலி சரக காவல்துறை தலைவர் (டி.ஐ.ஜி.) சண்முக ராஜேஸ்வரன் ஐ.பி.எஸ். அவர்களிடம் நமது ஊரில் நடந்து வரும் சமூப அவலங்களை களைவது குறித்த மனு அளிக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக் கொண்ட டி.ஐ.ஜி. அவர்கள் உரிய நேரத்தில் ஆலோசனையும் வழிகாட்டுதலும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.இதில் நெல்லை மாவட்ட தலைவர் சகோ.யூசுப் அலி , மாவட்ட துணைத் தலைவர் டி.எம். ஜபருல்லாஹ், கடையநல்லூர் நகர தலைவர் முஹம்மது கோரி, செயலாளர் முஹம்மது காசிம் என்ற சின்சா ஆகியோர் கலந்து கொண்டனர்..
மனுவைப் பார்க்க கிழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

0 comments:
Post a Comment