அல்லாஹ்வின் கிருபையால் நடந்து முடிந்தது ”தீர்வைத் தேடி” நிகழ்ச்சி

Sunday, July 25, 2010



ல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீர்க கடைய நல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் சமீப காலமாக நடந்து வரும் சமுதாய ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் துபாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலமையான JT மர்க்கஸில் 23.07.2010 அன்று ”தீர்வைத் தேடி” நிகழ்ச்சி அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் தலைமையில் சரியாக மாலை 5.30 மணிக்குத் துவங்கி மாலை 7:15 வரை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மிகவும் பயங்கரமான சீதோசன நிலை வெயில் 70 டிகிரிக்கு மேல் காணப்பட்டாலும் அதை பொறுப்படுத்தாமல் ஊர் நலன் கருதி 50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
அதில் முதலில் சகோ.முஹம்மது அலி தலைமை & மற்றும் அறிமுக உரை வழங்கினார்கள்.அதன் பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலச் செயலாளர் சகோ.அப்துல் ஸலாம் அவர்கள் சபை ஒழுங்கு பற்றி விளக்கிக் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கூறினார்கள். பிறகு பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலச் செயலாளர் சகோ.முஹம்மது நாசர் MISc. அவர்கள் நமது லட்சியம் என்ற தலைப்பில் நாம் ஏன் இங்கு கூடியிருக்கிறோம் நமது இலக்கு எதுவாக இருக்க வேண்டும் என்றும் நமது முடிவை குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் சிறப்பாக விளக்கினார்கள்.
அதன் பிறகு தலைவர் அவர்கள் அமீரகத்தில் வசிக்காத கடையநல்லூர் சகோதரர்கள் இ-மெயில் மூலம் வழங்கிய கருத்துகளை வந்திருந்த மக்களுக்கு வாசித்துக் காண்பித்தார்கள்.பிறகு மக்களிடம் கருத்து கேட்கப் பட்டது.மக்களும் ஆர்வத்தோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்ஹாக் அவர்களால் எடுக்கப் பட்ட தீர்மாணங்கள் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. இங்கு எடுக்கப்பட்ட தீர்மாணங்கள் இன்ஷா அல்லாஹ் கடையநல்லூரில் உள்ள அனைத்து தொழுகை பள்ளி மற்றும் ஊர் ஜமாஅத் பெரியவர்களுக்கும் முறையாக அணுப்பிவைக்கப்படும் என்றும் அக் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது.
இறுதியாக சகோ.அப்துல் ஸலாம் நன்றியுரை ஆற்ற தூஆ வுடன் இனிதே நிறைவுற்றது.அல்ஹம்துலில்லாஹ்.















1 comments:

abdul said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச்சகோதரர்களே நாம் இதுவரை எத்தனை கூட்டங்கள் இந்த இழிவான செயல்களுக்காக போட்டுள்ளோம் ஏதாவது பயன் கிடைத்ததா!நிச்சயமாக இல்லை சொல்லப்போனால் கூட்டங்களுக்கு பிறகுதான் நமதூர் மானம் இனையம் மற்றும் செய்தித்தாள்களிளும் நாறியது எந்த அளவுக்கு என்றால் !என்னுடன் பனிபுரியும் நன்பர்கள் இவளைப்போல் இன்னும் எத்தனை ஆன்டிகள் உள்ளனர் அவர்களது முகவரி கிடைக்குமா என்று கேட்கின்றார்கள் நானிக்குறுகி எனக்கு நானே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டேன்.வேறு என்ன செய்ய முடியும் என்ற இயலாமையும் ஒரு காரணம் நான் வாய்ப்பூட்டு போட்டதற்க்கு.இந்த இழிநிலைக்கு பென்கள் மட்டும் காரணமில்லை நமது சமுதாய இளைஞர்களும் தவறு செய்கிறார்கள் செல்போனில் மனிக்கனக்கில் பென்களிடம் தனிமையில் பேசுவது என்பது மார்க்கத்தில் அனுமதி இல்லாத ஒன்று.இனிமேல் தனிமையில் தெருக்களில் பெண்களிடம் யாராவது ஒரு தடைவைக்கு இருதடைவை பேசினால் கண்டியுங்கள்(தாக்குங்கள்) அவர்களுக்கு வரும் சட்ட ரீதியான பாதுகாப்பை (பிரச்சினைகளை)நாம் பின்பலமாக இருந்து காக்க வேன்டும் அதற்க்காக கையை வெட்டுவது ஆளை வெட்டுவது என்பது நமக்கு அனுமதி இல்லாத ஒன்று தனிமையை நாடும் பெண்களை நமது சகோதரகள் நன்கு அறிவார்கள் எப்படி என்றால் தவறு செய்ய நினைப்பவர்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்ப்படுவது இயல்பு .இது என்னால் எனது மனதிற்க்கு பட்டதை எழுதியுள்ளேன் ஒரு கட்டுரையே என்னால் எழுதமுடியும் ஆனால் இதையெல்லாம் செயல்படுத்துவதற்க்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் வேன்டும் நமது ஜமாத்தினர் மட்டும் முயற்சித்தால் வெற்றிபெறப்போவது பாஸிஸவாதிகளே

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP