அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்
Sunday, July 11, 2010
ஏக இறைவனின் திருப்பெயரால்…
இறையருளால் 09/07/2010 வெள்ளியன்று துபை ஜமாஅதுத் தவ்ஹீத் (TNTJ)மர்க்கஸில் வைத்து கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் –ன் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் சகோ.முஹம்மது அலி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கடையநல்லூரைச் சார்ந்த பெருவாரியான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அதில் பேசப் பட்டவை. :
v அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கடந்த ஜூலை 4 ல் நடைபெற்ற உரிமைப் பேரணி மாநாடு வெற்றியடைய தங்களின் உடலாலும் பொருளாலும் தியாகம் செய்து உழைத்த சகோதரர்களுக்கு ஜமாஅத் சார்பில் துஆவுடன் நன்றி தெரிவிக்கப்பட்டது.
v மாநாட்டு வகைக்காக வசூல் செய்யப்பட்ட தொகை குறித்த வரவு-செலவு அறிக்கை சகோ.முஹம்மது அலி அவர்களால் சமர்ப்ப்பிக்கப்பட்டது.
v மாநாட்டு வகைக்காக ஊருக்கு அனுப்ப வாக்களித்த தொகையில் முதல் கட்டமாக அனுப்பிய தொகை போக மீத தொகையை அனுப்புவது குறித்து பேசப்பட்டது.
v ஜூன் மாதம் நமதூரில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்த அறிக்கை வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
v SSLC, +2 மாணவர்களுக்கு பரிசு வழங்கிய வகைக்கு ரியாத் மண்டலம் சார்பில் வழங்கப்பட்ட தொகை போக மீத தொகை முழுவதையும் நாமே வழங்குவது குறித்து சகோதரர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
v காலை,மாலை மதரஸாவிற்காக பிரதிமாதம் வழங்குவதாக நாம் ஒத்துக்கொண்ட தொகை கடந்த இருமாதங்களாக வழங்கப்படவில்லை.அது குறித்து பேசப்பட்டு அத்தொகையை இம்மாதம் சேர்த்து அனுப்புவதற்க்கும் தீர்மானிக்கப்பட்டது.
v எதிர்வரும் ரமலான் மாதத்தில் மாற்றுமத சகோதரர்களுக்கும்,இஸ்லாமிய பெண்களுக்குமான கட்டுரை போட்டி நடத்துவது குறித்து பேசப்பட்டது.
v UAE யில் உள்ள மற்ற மண்டலங்களில் உள்ள சகோதரர்களை சந்தித்து ஊரில் நடைபெறும் பணிகளை எடுத்துரைத்து அவர்களையும் இவ்விறைப்பணியில் பங்கு கொள்ளச் செய்வது குறித்து பேசப்பட்டது.
v சகோ.அப்துந் நாசிர் அவர்கள் ரமலானுக்காக தாயகத்திலிருந்து துபை வருவதையொட்டி அவரை நமதூர் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
v நமதூரைச் சார்ந்த கொள்கைச் சகோதரரின் மகனுடைய கல்விக்காக கேட்டுக் கொண்ட ரூ.60000 ல் ரூ30000 வழங்கப்பட்டு விட்டது. மீதி தொகையை வழங்க சகோதரர்கள் பங்களிக்குமாறு கேட்கப்பட்டது.
v வருகின்ற ரமலான் மாதம் கடையநல்லூரில் நோன்புக் கஞ்சி வகை காகவும் , பித்ரா வகைக்காகவும் அனைத்து சகோதரர்களும் தாங்களின் மேலான பங்களிப்பை அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.




0 comments:
Post a Comment