ஜூலை 4 மாநாடு

Monday, July 5, 2010

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,,,


திணறியது தீவுத்திடல்
அலைகடலென ஆர்ப்பரித்தது மக்கள் வெள்ளம் அல்லாஹ்விற்கேப் புகழனைத்தும்.

இஸ்லாமிய சமுதாய மக்களின் நீண்ட உறக்கம் கலைந்தது,
இனி இல்லை பின்னடைவு,

எழுச்சியை நோக்கி நகரும் காலத்தின் தொடக்கம் இது.
கெந்தக மண்ணை விட்டு வெளியேறி இந்திய மண்ணில் குடியேறும் காலத்தின் தொடக்கம் இது,
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை ப்ளாட்பாரங்களை விட்டு நகர்த்தி குடிசைகளுக்கு மாற்றும் காலத்தின் தொடக்கம் இது,
தீவிரவாதிகள் எனும் பொய் முத்திரையை உடைத்தெறியும் காலத்தின் தொடக்கம் இது

எதிர் பார்த்ததை விட மக்கள் கூட்டம் அதிகரித்தது,
எப்பொழுதும் போல எந்த அசம்பாவிதமும் இல்லை.

பேரணியிலும்
பொதுக்கூட்டத்திலும் வாழ்வாதார கோஷங்களே விண்ணைப் பிளந்தது.

அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிகரமாக நடந்த முடிந்த மாநாடுப் பற்றிய தகவல்கள்அதில் இயற்றப்பட்டத் தீர்மாணங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆதாரப்பூர்வ இணையதளங்களில் விரைவில் வெளிவரும்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது(முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். 110:1

وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்


















அல்லாஹ்வின் பேருதவியால் நடந்து முடிந்த இடஒதுக்கீடு கோரிக்கை மாநாட்டில் 21 தீர்மானங்கள் தமிழ் மற்றும் உருது  ஆகிய மொழிகளில் வாசிக்கப் பட்டு கலந்து கொண்ட லட்ச்சக்கணக்கான மக்களின் ஆதரவு வோடு நிறைவேற்றப் பட்டது.
அவைகளில் சில

.  கடந்த 60 ஆண்டு காலமாக கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ள முஸ்லீம்களுக்கு மத்திய அரசுப் பணியில் 10 சதவித தனி இடஒடுக்கீடு அளிக்க வேண்டும்.
2.  ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்சி , உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில்  சட்டம் கொண்டுவர வேண்டும்.
3.  மத்திய அரசின் ராணுவம், உளவு உள்பட பாதுகாப்புத்துறைகளிலும் இதே போல் மாநில அரசின் காவல் மற்றும் உளவுத்துறையிலும் முஸ்லீம்களுக்கு 20 சதவித இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தனித் தொகுதி
4.  தலித் மக்களுக்கு தனிதொகுதிகள் இருப்பது போல் உள்ளாட்ச்சி, சட்டமன்றம், பாராளுமன்றம், மாநிலங்களவை , மேல் சபை அனைத்திலும் 10 சதவித தொகுதிகளை முஸ்லீம் தனித் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
5.   உத்தர பிரதேசத்தில் இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் முஸ்லீம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்.
இவைகளுடன் இன்னும் பல தீர்மானங்கள் அல்லாஹ்வின் உதவியால் நிறைவேற்றப் பட்டன

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP