தவ்ஹீத் ஜமாஅத் அச்சன் புதூர் கிளை தர்பியா
Monday, April 5, 2010
நெல்லை மாவட்டம் அச்சன் புதூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக ஏப்ரல் 3 சனிக்கிழமை அன்று தர்பியா முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் காசிதர்மம் அருகிலுள்ள ஒரு தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தர்பியா வகுப்பில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். சகோதரர் அப்பாஸ் அலி ஜனாஷாவின் சட்டதிட்டங்கள் தொடர்பான வகுப்பெடுத்தார். இன்னும் மார்க்க ரீதியான சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியை அச்சன் புதூர் கிளைத் தலைவர் யாகத் அலி மற்றும் நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் அச்சன் புதூர் சுலைமான் மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர். இதில் நிர்வாகிகள் உட்பட 25 சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment