பொட்டல்புதூரில் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் - தினமனி செய்தி
Monday, April 12, 2010
திருநெல்வேலி மாவட்டம், பொட்டல்புதூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்மிக விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த அமைப்பின் நகரத் தலைவர் பி.எம்.எஸ். அப்துல்காதர் தலைமை வகித்தார்.
திருநெல்வேலி மாவட்டத் தலைவர் யூசுப்அலி, செயலர் கே.ஏ. செய்யதுஅலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ. சைப்புல்லாஹ் காஜா கலந்து கொண்டு பேசினார்.
அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் ஜபருல்லாஹ் பத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.

0 comments:
Post a Comment