கடையநல்லூரில் பாப்பான்கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
Wednesday, April 21, 2010
கடையநல்லூர் பாப்பான்கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் மூர்த்தி தலைமையில் கடையநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தென்காசி வட்டாட்சியர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேசிய தென்காசி வருவாய் கோட்டாட்சியர், பாப்பான்கால்வாய் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 4000 ஏக்கர் பாசன நிலங்களுக்கும் தண்ணீர் செல்ல வசதியாக கால்வாயின் அகலம் 45 அடியாக இருக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் விவசாய நிலங்களுக்குச் சென்றடையும் என்றார்.
இதனையடுத்து பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:
அயுப்கான் (இந்திய கம்யூ.): பாப்பான்கால்வாயின் ஓரங்களில் அரசு மருத்துவமனை, ஆடறுப்பு நிலையம் என பல்வேறு கட்டடங்களை அரசு நிர்வாகமே ஆக்கிரமித்து கட்டியுள்ளன. முதலில் அதனை அகற்ற நடவடிக்கை எடுங்கள். மேலும், பாப்பான்கால்வாயின் ஓரங்களில் குடியிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்த பின்னரே அதனை அகற்ற வேண்டும்.
ஆசைத்தம்பி (விடுதலைச் சிறுத்தைகள்): பாப்பான்கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மற்றும் அந்தளவு தண்ணீர் செல்வதற்கு தேவையான அகலம் மற்றும் ஆழம் ஆகியவற்றை முதலில் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே, அதற்கேற்ற வகையில் குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும்.
ராஜசேகரன் (மார்க்சிஸ்ட் கம்யூ.): 45 அடி அகலம் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 40 அடிக்கு குறைவாக அகலம் இருக்குமாறு ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். இந்த நடவடிக்கையால் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, அரசு அவர்களுக்கு உரிய மாற்று வழிகளைச் செயல்படுத்திட வேண்டும்.
கிட்டுராஜா (அதிமுக): குடியிருக்கும் மக்களுக்கு சர்வ வசதிகளையும் செய்து கொடுத்த அதிகாரிகள், திடீரென்று அவர்களை வெளியேறச் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்?
முகம்மதலி (திமுக) மற்றும் ஷாநவாஸ்கான் (காங்கிரஸ்): ஓடையின் இருபுறம் உள்ள பகுதிகளில் 5 அடி மட்டும் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றினால் போதுமானது.
ஸைபுல்லாகாஜா (தவ்ஹீத் ஜமாஅத்): மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்த பின்னரே ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும்.
மேலும், செய்யதுஅகம்மது (முஸ்லீம் லீக்), குமார் (தேமுதிக),
ராம்நாத்போஸ் (பாஜக), ராமநாதன் (மதிமுக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


1 comments:
TNTJ - வின் அரசியல் எதிகாலத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
Faisal.
Post a Comment