கடையநல்லூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
Wednesday, April 14, 2010
கடையநல்லூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
கடையநல்லூரில் ஏற்பட்டு வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புள்ளாகி வருகின்றனர்.கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை என விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் பெரும்பாலான பகுதிகளில்
5 நாட்களுக்கு ஒருமுறை தான் சப்ளை செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் பரவலாக பேசப்படுகிறது.
நகராட்சிக்கு குடிநீர் தரக்கூடிய பிரதான பகுதியாக விளங்கும் பெரியாற்று படுகையில் நீர்பிடிப்பு முழுமையாக குறைந்துவிட்ட நிலையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தினாலான குடிநீர் அளவும் குறைந்து வருவதால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை கடையநல்லூர் நகராட்சி பகுதியில் காணப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பெரும்பாலானோரால் சிறிதளவே விழும் நீரை கூட பிடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை நகராட்சி பகுதியில் காணப்படுவது வாடிக்கைதான் என்றாலும், இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்னையாக மக்களுக்கு காணப்பட்டு வருகிறது. குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், நகராட்சி அதிகாரிகளின் குடியிறுப்பு முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Courtesy: Dinamalar
0 comments:
Post a Comment