கடையநல்லூரில் தெருமுனைப் பிரச்சாரம்
Friday, March 12, 2010
11. 03. 2010 வியாழன் அன்று கடையநல்லூர் இக்பால் வடக்குத் தெருவில் சமூக அவலங்களைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா மாணவ மாணவியர் முதலில் உரையாற்றினர்.
இறுதியாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் உரையாற்றினார்கள். கடையநல்லூர் விஸ்வா விளை பகுதியில் பெண்களுக்கு மத்தியில் பேய் பிசாசு நம்பிக்கை பேய் போன்று பிடித்துள்ளது.இறந்தவர்கள் மரணித்த பிறகு யார் மீதாவது ஆவியாக இறங்குவார்கள் என்று நம்பிக்கை கொள்வது இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கையாகும் எனவும் இறந்தவர் யாரும் மீண்டும் இவ்வுலகிற்கு வரமுடியாது என்பதையும் விளக்கி கூறினார்.மேலும் புறம் பேசுவதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இறுதியாக ஜுலை 4 ல் நடைபெறும் உரிமை மீட்பு மாநாடு பற்றி அறிவிப்புச் செய்யப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment