கடையநல்லூர் நகராட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.

Tuesday, March 30, 2010

குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத்தொகையை இரு மடங்கு உயர்த்திய நகராட்சியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் நகராட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் மாபெரும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 29.03.2010 (திங்கள்) அன்று மாலை 4 : 30 மணியளவில் நகராட்சி முன்பு நடைபெற்றது. நகரத்தலைவர் முஹம்மது கோரி அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட துனைத்தலைவர் டி.எம்.ஜவருல்லாஹ் , மாவட்ட அரசு நலத்திட்ட அணிச் செயலாளர் சுலைமான். செயலாளர் முஹம்மது காசிம், பொருளாளர் பாவா மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ஆற்றிய கண்டன உரையில் ”காலம் சென்ற எஸ்.எம்.ஏ.மஜீத் அவர்களால் பெரியார் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டு கடையநல்லூர் நகர மக்களின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுக்கு முன்னர் பதிக்கப்பட்ட பழைய குழாய் மூலமே குடிநீர் விநியொகிக்கப் படுகிறது.


தற்போது நகர மக்கள் தொகை பல மடங்காக பெருகியுள்ளது. நகர மக்கள் குடியிருப்பு பகுதியும் விரிவடைந்துள்ளன. நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் குடிநீர்க்கான உத்திரவாதத்தை நகராட்சி நிர்வாகம் அழிக்க கடமைப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நகர மக்களின் குடிநீர்த் தேவையை கருத்தில் கொண்டு தாமிர பரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப் பட்டது.

இது நகர மக்கள் அனைவரின் தேவையை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. சில பகுதிகளில் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது, சில பகுதிகளில் தண்ணீர் தேவைக்கும் குறைவாகக் கிடைக்கிறது. இன்னும் சில பகுதிகளில் அறவே கிடைப்பதுமில்லை.முன்னர் பதிக்கப்பட்ட குடிநீர் விநியோகக் குழாய்கள் ஒரே சீராக பதிக்கப் படாததும் நகரம் விரிவடைந்ததற்கெற்ப குடிநீர் தேக்கத் தொட்டிகள் கட்டப் படாததுமே இதற்குக் காரணம்.

இதை சரி செய்வதற்காக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் முதலமைச்சரிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி கிட்டத்தட்ட 21.5 கோடி செலவில் திட்டம் கொண்டு வருவதற்காக கடையநல்லூர் நகராட்சியை கேட்டுக் கொண்டார். இத் திட்டத்திற்க் கென்று தமிழக அரசால் முழுக்க மாணியமாக வளங்கப் படும் இத் தொகையை கடையநல்லூர் நகராட்சி, நகர மக்கள் மீது குடிநீர் வைப்புத் தொகையாக கட்டணமாக சுமத்தியுள்ளது. இது முற்றிலும் மக்கள் விரோதச் செயல் என்பதை விளங்கிய பெரும்பான்மையான நகர் மன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சிறப்புத்தீர்மானம் கொண்டு வரப்பட்ட நகர் மண்றக் கூட்டத்தில் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற விடாமல் கூட்டத்தை முடிக்க வைத்தனர்.

இந்நகர மக்களின் துரதிரிஷ்ட்டவசம் என்னவோ மிசாவைப் போல இதே நகர் மண்றத்தில் அர்த்த ராத்திரியில் வீட்டு வரியை உயர்த்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது போல இப்போது குடிநீர் வைப்புத்தொகைக் கட்டணத்தை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைப் பொருத்த அளவில் வரவேற்க்கப்பட வேண்டிய திட்டமே, இச்சுமையை நகர மக்களின் மீது சுமத்துவதை ஒருக் காலமும் ஏற்க்க முடியாது. தமிழக மக்களுக்கு பல இலவச நலத்திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் பாரி வள்ளல் தமிழக முதலமைச்சர் அவர்கள் இந் நகர மக்களின் குடிநீர் தேவையையும் இலவசமாக வாரி வழங்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.

பாப்பங்கால் கால்வாய் ஓரங்களில் பல சமூகத்தவர்கள் ஒருத்தலமுறைக்கு மேலாக முறையான வீட்டுத்தீர்வை, மிண் கட்டணம் , குடிநீர்க் கட்டணம் போன்ற வற்றைச் செலுத்தி வசித்து வருகின்றார்கள். கால்வாய் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை இடித்துத் தள்ள வேண்டும் என்ற உயர் நீதி மன்ற உத்தரவை உடணடியாக அமுல் படுத்த துடிக்கும் அரசு நிர்வாகம் இதுபோன்று தேசிய நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வழி பாட்டுத் தலங்களையும் இடித்துத் தள்ள வேண்டும், என்று உயர் நீதிமண்ற மதுரைக் கிளை உத்தரவு விட்டதே அது என்ன ஆனது.

ஆக்கிரமிப்புகலள் அகற்றப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அதே நேரத்தில் அப் பகுதிகளில் பல்லாண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்த பின்னரே ஆக்கிரமிப்புக்கள் அகற்றப் பட வேண்டும். என்ற உச்சநீதி மன்ற உத்தரவை அமுல் படுத்த வேண்டும்.எனக் கேட்டுக் கொள்கிறோம்”.இவ்வாறு கூறினார்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP