தாவாப் பணிகள்
Thursday, March 4, 2010
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையநல்லூர், தவ்ஹீத் ஜமாஅத் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள், அதன் ஒரு பகுதியாய் உஙகள் பார்வைக்கு,
அல்லாஹ்வின் அருளால் கடந்த 28/02/2010 ஞாயிற்றுக் கிழமை காலை 10:00 மணி முதல் 12:30 வரை கடையநல்லூர் அல் மஸ்ஜிதுல் முபாரக்கில் வைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி) முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் நகர TNTJ தலைவர் சகோ.முஹம்மது கோரி MISC அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இஸ்லாமியக் கல்லூரியின் பேராசிரியர்களான சகோ.அப்துந் நாசிர் மற்றும் சகோ.அப்பாஸ் அலி ஆகியோர் குர்ஆன்,ஹதீஸ் வழியில் தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள், இஸ்லாமிய இயக்கங்கள் ஒர்-பார்வை என்ற தலைப்புகளில் உரையாற்றினர். இறுதியாக மாணவர்கள் மத்தியில் எழுந்த சந்தேகங்களுக்கு சகோ.அப்துந் நாசிர் அவர்கள் பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நகர TNTJ மாணவரணிச் செயலாளர் சகோ.அப்துல் அஜீஸ் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்
.
------------------------------------------------------------------------
27/02/10 அன்று மாலை 5:00 மணி முதல் 7:00 வரை மணி அய்யாபுரம் தெற்கு தெருவில் (மசூது தைக்கா பள்ளி அருகில்) உள்ள சங்கத்தில் வைத்து ஈஸா(அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா? என்ற தலைப்பில் காதியானிகளுக்கு இடையில் நடைபெற்ற விளக்க வகுப்பில் சகோ.அப்துந் நாசிர் கலந்து கொண்டு குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் விளக்கமளித்தார். காதியானிகளால் எழுப்பப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான ஆதாரங்களுடன் பதிலளித்தார். இந்நிகழ்ச்சிக்கு சகோ.M.J.முஹம்மது அலி தலைமை தாங்கினார்.
------------------------------------------------------------------------
28/02/10 அன்று இக்பால் நகர் பகுதியில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோ.அப்துந் நாசிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
------------------------------------------------------------------------
01/03/10 அன்று கடையநல்லூர் கல்வத்து நாயகம் கீழ தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர் சகோ.முஹம்மது உரையாற்றினார்.
------------------------------------------------------------------------
27/02/2010 வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, மவ்லிதுக்கு எதிரான,”ஓதும் இறைநெறிகளும் மோதும் ஸுப்ஹான மவ்லித் வரிகளும்” என்ற தலைப்பிலான 12 பக்க விளக்கச் சிற்றேடு கடையநல்லூர் TNTJ கிளை சார்பில் வினியோகம் செய்யப்பட்டது. இப்பிரசுரம் நகரின் அனைத்துப் பகுதியிலும் உள்ள வீடுகளுக்கும் பரவலாக வினியோகம் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment