இஸ்லாமிய இளைஞர் விழிப்புணர்வுப் பிரச்சாரம் (தஃவா)
Friday, February 19, 2010
ஏக இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இம் மாதம் (பிப்ரவரி 7-17, 2010) நமதூரில் இஸ்லாமிய இளைஞர் விழிப்புணர்வுப் பிரச்சாரம் (தஃவா) மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் நமதூரில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர்களால் நடத்தப்படுகின்ற சங்கங்களுக்கும்,சங்கம் சாராத இளைஞர்களுக்கும் இஸ்லாத்தின் கொள்கைகள் மற்றும் கடமைகள் குறித்தும்,அத்தோடு நான்குவகை செயல்திட்டத்துடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆற்றிவரும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளைப் பற்றியும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பிரச்சாரத்தின் போது, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையின் அவசியம் குறித்து மிகவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் இணைவைப்பு (சமாதி வழிபாடு,மவ்லித்,மத்ஹப் பிரிவுகள்) மற்றும் பித்அத் ஆன காரியங்கள் பற்றியும் எடுத்துரைத்து இத்தீமைகளிலிருந்து நாமும் விலகி, நமது சமுதாயத்தையும் மீட்டெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. குறிப்பாக, இஸ்லாமிய ஆட்சி,ஜிஹாத் குறித்து தவறாக விளங்கியிருந்த இளைஞர்களின் கேள்விகளுக்கு சரியான காரணங்களுடன் குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் அளிக்கப்பட்டது.குறிப்பாக பேட்டை பகுதியில் உள்ள சில சகோதரர்கள் எழுப்பிய இயக்கரீதியிலான கேள்விகளுக்கு “மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் எதுவாகினும் அது அல்லாஹ்வும்,அவனது தூதரும் காட்டித்தந்த வழிமுறைப்படியே இருக்க வேண்டும் இல்லையெனில் அது இறைவனால் நிராகரிக்கப்படும்” என்ற கருத்து ஆழமாகவும்,அழுத்தமாகவும் எடுத்து வைக்கப்பட்டது.
சமீப காலமாக நமதூரில் நிலவி வரும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கும்,விரும்பத்தகாத நிகழ்வுகழுக்கும் முஸ்லீம்களாகிய நாம் இஸ்லாத்தை முறையாக அறிந்து அதை நம் வாழ்வில் கடைபிடிக்கத் தவறியதே காரணம் என்றும் எதிர்வரும் காலங்களில் இந்நிலையை மாற்ற இஸ்லாமிய இளைஞர்கள் குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்து அல்லாஹ்விற்காக பணியாற்ற முன் வர வேண்டும் என்றும் இப்பிரச்சாரத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது. தனிநபர் சந்திப்புகளாக நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு பிரச்சாரம் ஏரத்தாள 70 க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத்(TNTJ) தலைவர் சகோ.M.J.முஹம்மது அலி அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின் போது இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-மதுரை கேள்வி பதில்,அன்பான அழைப்பு குறுந்தகடுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
சந்திப்பு நடைபெற்ற இடங்கள்:
1.இக்பால் தெற்குத் தெரு பகுதி மாணவர்கள்
2.ஆட்டோ டிரைவர்கள் (தெப்பம் ஆட்டோ ஸ்டாண்ட்)
3. MNP இயக்கத்தினர். (தெப்பம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில்)
4.தாவூஸ் அசோசியேசன். கலந்தர் மஸ்தான் தெரு.
5.ரஹ்மானியாபுரம் பகுதி இளைஞர்கள்.
6.மெயின் பஜார் SMP காம்ப்ளக்ஸ் சங்க மாணவர்கள்.
7.மதினா நகர் பகுதி (MNP) இளைஞர்கள்.
8.அல் காரியா குரூப்ஸ், மதினா நகர் 2 வது தெரு.
9.MNP இயக்கத்தினர்,புதுமனை வடக்குத் தெரு,பேட்டை.
10.புதுத்தெரு மேற்குப் பகுதி இளைஞர்கள்.
11.நடுஅய்யாபுரம் தெரு இளைஞர்கள்.
0 comments:
Post a Comment