கடையநல்லூரில் கூடுதல் டாக்டர்கள்: நியமிக்க கோரி தவ்ஹீத் ஜமாத் மனு
Monday, January 11, 2010
கடையநல்லூரில் எம்.டி.படித்த ஆண் டாக்டர், மயக்க மருந்தியல் டாக்டர் நியமனம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழக சுகாதார துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் S.S.U,சைபுல்லாஹ் மனுவில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூரில் மர்மக் காய்ச்சல் காரணமாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் பாதித்து 10 பேர் பலியாகிவிட்டனர். நாள்தோறும் 1,500 வெளிநோயாளிகள் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கிசிக்சைக்காக வந்து செல்கின்றனர். இருப்பினும் போதுமான டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் நலனை கருத்தில் கொண்டு எம்.டி., ஆண் டாக்டர் நியமிக்க வேண்டும். மயக்க மருந்தளிக்கும் டாக்டர், செவிலியர்களுக்கு தேவையான உதவியாளர்கள், குளிர்சாதனபெட்டி வசதி, துப்புரவு பணியாளர்கள் நியமனம், ஜெனரோட்டர் வசதி, கூடுதல் படுக்கை வசதி, இக்பால் நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகள் மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment