பாபர் மசூதி இடிப்பு - காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே பொறுப்பு: நாயுடு!

Tuesday, November 24, 2009

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் சம அளவில் பெறுப்பாவார்கள் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சியே பொறுப்பு. அதேவேளை மத்திய அரசு அதிகாரத்தில் வீற்றிருந்த காங்கிரஸ் கட்சி, மசூதி இடிப்பைத் தடுத்த நிறுத்தாதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறினார்.மசூதியை இடிப்பதற்காக கரசேவகர்கள் அயோத்தி சென்றதை அறிந்தும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் பிரதமர் நரசிம்ம ராவ் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.பாபர் மசூதி இடிக்கப்பட்டது மனோ ரீதியிலான நிகழ்வாக அமைந்துவிட்டது. பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால் நாட்டில் சமூக அமைதி நிலவியிருக்கும். பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைகள் மசூதி இடிப்பின் விளைவே என்றும் நாயுடு கூறினார்.



0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP