கடையநல்லூர் கோட்ட பகுதியில் இன்று முதல் மின்தடை நேரம் மாற்றம்

Monday, November 23, 2009

கடையநல்லூர் மின்கோட்டத்தில் இன்று முதல் (23ம் தேதி) மின் தடை நேரம் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்து மின்கோட்ட செயற் பொறியாளர் நடராஜன் கூறியிருப்பதாவது:- கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட வீரசிகாமணி, கடையநல்லூர், புளியங்குடி, நாரணபுரம் மற்றும் விஸ்வநாதபேரி துணை மின் நிலையங்களிலில் இன்று (23ம் தேதி) முதல் மின்தடை நேரம் சுழற்சி முறையில் மாற்றப்படுகிறது. கடையநல்லூர் உபமின் நிலையத்த்திற்குட்பட்ட டவுன்-1, டவுன்-2, மில் ஆகிய பீடர்களில் மின்சப்ளை அதிகாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் 8-10 ஆகவும், 8-10 ஆனது 10-12 ஆகவும் சுழற்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புளியங்குடி உபமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள டவுன் பீடரில் மின்தடை சுழற்சி நேரம் 8-10 ஆகவும், சொக்கம்பட்டியில் 10-12 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று வீரசிகாமணி உபமின் நிலையம், நாரணபுரம் உபமின் நிலையம், விஸ்வநாதபேரி உபமின் நிலையங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த மின்தடை சுழற்சி நேரம் 6-8ல் இருந்து 8-10 ஆகவும், 10-12ல் இருந்து 12-2 ஆகவும், 2-4ல் இருந்து 4-6 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை சுழற்சி முறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி மின்வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP