மர்யம் தவ்ஹீத் பள்ளியின் பொதுக்குழு கூட்டம்
Saturday, October 17, 2009
மர்யம் தவ்ஹீத் பள்ளியின் பொதுக்குழு கூட்டம்
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3 வது தெருவில் அமைந்துள்ள மர்யம் தவ்ஹீத் பள்ளியின் பொதுக்குழு கூட்டம் சகோதரர் மவ்லவி ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மர்யம் பள்ளி தலைவர் செய்யது சுலைமான் தங்கள், பொருளாளர் கும்மாளி இலாஹி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் இரமலான் மற்றும் ஃபித்ரா வரவு செலவுக் கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் சகோதரர் உமர் ரைஹான் (உமர்ந்தரகன்) சுல்தான் அவர்கள் மர்யம் பள்ளியின் இமாமாகவும், குழந்தைகள் மதரஸா ஆசிரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். மேலும் நூப்பன் புகாரி அவர்கள் மர்யம் பள்ளியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்கள்.
செய்தி : கே.எம். அப்துந் நாஸிர்
.jpg)
0 comments:
Post a Comment